| ||||||
| ||||||
வெள்ளி, ஜூலை 29, 2011
முதல் கொடுமை
| ||
புதன், ஜூலை 20, 2011
புவனேஸ்வரி மகாத்மியம் - பகுதி 2
முன் குறிப்பு : இந்த தொடரை படித்து விட்டு அத்தை பல அரிய தகவல்களை தந்து கொண்டிருக்கிறார். அவற்றை தொகுத்தால் இன்னுமொரு தொடரே கிடைக்கும். அவற்றை கொண்டு "வேர்களும் விழுதுகளும்" என்ற தொடரை எழுத திட்டமிட்டுளேன். இரண்டு தகவல்களை மட்டும் இப்போது வெளி இடுகிறேன்.
தகவல் ஒன்று : நவராத்திரியில் ஒரு நாள் மட்டுமல்ல ஒன்பது நாட்களும் சுமங்கலிகளுக்கு மட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் (கை குழந்தை முதல் கம்புன்றும் பாட்டி வரை) எல்லோருக்கும் அரச மாளிகையில் மரியாதை உண்டு.
தகவல் இரண்டு : பெண்களுக்கு நவராத்திரியில் சாப்பாடு போட பட்டதில்லை. அரிசி, பருப்பு, வெல்லம் முதலியவற்றோடு நான் முன்பே கூறிய மங்கல பொருட்களும் தரப்படும்.
சரி கதைக்கு வருவோம். இந்த கதையை கேட்கும் முன் கதையின் களமாகிய
எங்கள் ஊரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இது சென்னையின் புறநகர் பகுதியாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தது. இன்றும் பாரிமுனைக்கு செல்வதை மெட்ராஸ் போகிறேன் என்று தான் பலரும் சொல்வார்கள். இங்கு சாதாரணமாக மளிகை, காய்கறி கடைகள் மட்டும் தான் அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் சில இடங்களில் தான் இருக்கும். இரவு ஒன்பது மணிக்கெல்லாம் கடைகள் அடைக்கப்பட்டு விடும்.
எங்கள் ஊரில் இருக்கும் ஒரு டீ கடையை காட்டி என் தம்பிகள் "டேய் அக்கா ஊரு பைவ் ஸ்டார் ஹோட்டல் பாருடா!" என்று கிண்டல் செய்வார்கள். முக்கியமாக எதாவது வாங்க வேண்டுமென்றால் தாம்பரத்திற்கு தான் போக வேண்டும். ஊருக்குள் பஸ் வசதியெல்லாம் கிடையாது. எல்லாவற்றிற்கும் ஆட்டோ தான். மெயின் ரோடுக்கு வந்தால் தான் அதுவும். ஆட்டோ பிடித்து தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் அல்லது ஜி.எஸ்.டி ரோடு வரவேண்டும்.
என் நிலை இப்படி இருக்க தலைவர் அலுவலகத்தில் வருடா வருடம் எங்காவது டூர் செல்வது வழக்கம். இந்த வருடம் ஊட்டி செல்வதாக ஒரு மாதம் முன்பே முடிவெடுக்க பட்டுவிட்டது . அப்போதில் இருந்தே ஒரே கனவுதான் எனக்கு. குழந்தைகளுக்கு புதிதாக இரண்டு செட் டிரஸ் எடுக்க வேண்டும் என்று தலைவரிடம் ஒரு பிட்டை போட்டு வைத்தேன். அதற்கு அவர் "டூர் என்ன தீபாவளியா, பொங்கல்லா? அதற்கு எதற்கு புது டிரஸ்?", என்றார்.
சரி இவர் சரிப்பட்டு வரமாட்டார் நாமே போய் வாங்கி வந்து விடவேண்டியது தான் என்று முடிவு செய்துகொண்டேன். என் நேரம் அன்றிலிருந்து குழந்தைகளுக்கு மாறி மாறி உடம்பை படுத்த தொடங்கியது. தலைவரோ "குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை நாங்கள் வரவில்லை என்று சொல்லிவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டார்.
அவ்வளவுதான், நம்புங்கள் மக்களே நம்புங்கள்.தலைவர் அலுவலகத்தில் இருந்து ஒருத்தர் ஒருத்தராக போன் போட்டு
"அக்கா, நீங்க வரலேன்னா எப்படி ?"
"அண்ணி, கட்டாயம் எப்படியாவது வந்திடுங்க".
"என்ன மேடம், சார் இப்படி சொல்றார்?"
என்று புலம்பி எடுத்து விட்டார்கள்.
இதையெல்லாம் கேட்டு சரி டாக்டரிடம் கேட்டு மருந்து வாங்கி கொண்டு போய் விடலாம் என்று கொள்கையளவில் முடிவெடுத்தோம். குழந்தைகளுக்கும் 24 மணி நேரமாக காய்ச்சல் இல்லாமல் இருந்தது.
ஏழாம் தேதி மாலை தனி பேருந்தில் கிளம்ப ஏற்பாடாகி இருந்தது. நாங்கள் முடிவெடுத்தது ஏழாம் தேதி காலையில்.
கடந்த ஏழாம் தேதி காலை தலைவர் அலுவலகம் செல்லும் முன் "சரி, டுர்ருக்கு பாக் பண்ணிடு, சாயங்காலம் ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பவேண்டும். ஆறரை மணிக்கு பஸ் பெருங்களத்தூர் வரும். அங்கு ஏறிக்கொள்ள வேண்டும். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்தால் கிளம்பத்தான் சரியாக இருக்கும். எதுவும் இழுத்து விட்டு கொள்ளாதே. இருக்கிறதை வைத்து பாக் பண்ணு." என்று மிரட்டி விட்டு சென்றார்.
நானும் சரியென்று இருந்திருக்கலாம். விதி யாரை விட்டது என்னை மட்டும் விடுவதற்கு. எல்லா வேலைகளும் மதியம் இரண்டு மணிக்குள் முடிந்து விட்டன. இரண்டு மணிக்கு சின்னவளை ஸ்கூலில் இருந்து அழைத்து வரவேண்டும். பெரியவளை மூன்று மணிக்கு அழைத்து வரவேண்டும்.
எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நிறைய நேரம் தான் இருக்கிறதே சின்னவளை அழைத்துக்கொண்டு அவர்களுக்கு தேவையான மாட்சிங் டாப்ஸ் மட்டும் இரண்டு வாங்கிகொண்டு பெரியவளுக்கு ஸ்கூல் விடுவதற்குள் வந்துவிடலாம் என்று திட்டம் போட்டேன்.
மாட்சிங் டாப்ஸ் வாங்க வேண்டிய pants, skirts எல்லாம் ஒரு பையில் எடுத்து கொண்டேன்.பணம் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன். சின்னவளை ஸ்கூலில் போய் அழைத்து கொண்டு ஒரு ஆட்டோ பிடித்தேன். அந்த நேரத்தில் ஆட்டோ கிடைப்பதே எங்கள் ஊரில் சிரமம்.
ஆட்டோ காரர் கேட்டார்,"இந்த நேரதுலயம்மா இந்த ஸ்கூல் விடுவாங்க, நாலு மணிக்கு இல்ல?"
"சின்ன class க்கு கெல்லாம் இரண்டு மணிக்கு விட்டுடு வாங்க, மத்தவங்களுக்கு மூணரை மணிக்கு விடுவாங்க. நீங்க என்ன ஸ்கூல் ஆட்டோவா?"
"ஆமாம்" என்றார் ஆட்டோகாரர்.
நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. பணத்தை தந்து விட்டு இறங்கி கொண்டேன். நான் இறங்கிய இடத்திலும் ஒரு ஸ்கூல் இருந்தது. ஆட்டோ காரர் கேட்டார் "எம்மா ஸ்கூல் பக்கத்துலையே வீடு இருக்கும் போது ஏன் இந்த ஸ்கூல்ல சேர்க்காம தூரமா கொண்டு செர்த்திருகேங்க? இது நல்ல ஸ்கூல் இல்லையா?"
"இதுவும் நல்ல ஸ்கூல் தான் ஆனால் எங்க வீடு இங்க இல்ல, இங்க வேற ஒரு வேலையாய் வந்தேன்." என்று சொல்லி விட்டு குழந்தையையும் அழைத்து கொண்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். ஆட்டோவும் திரும்பி போய் விட்டது.
ஒரு நாலடி நடந்திருப்பேன் அப்போது தான் கவனித்தேன் கையில் குழந்தையின் ஸ்கூல் bag, lunch bag, matching dress வாங்க வேண்டிய துணிகள் இருக்கும் பை எல்லாம் இருக்கிறது என் கை பையை மட்டும் காணவில்லை. வேகமாக ஆட்டோ நின்றிருந்த இடத்திற்கு திரும்பி வந்து பார்த்தேன் ஆட்டோ போய் விட்டிருந்தது. நிச்சயம் பை அதில் தான் விழுந்திருக்க வேண்டும்.இப்போது என்ன செய்வது ? எப்படி தேடுவது? நேரமும் குறைவாகவே இருந்தது. என்னிடம் சுத்தமாக பணம் இல்லை. கையில் குழந்தையுடன் திரு திரு வென்று முழித்து கொண்டு நின்றேன்.சில நிமிடங்கள் தான். ஒரு யோசனை தோன்றியது.
நான் இறங்கிய இடத்திலும் ஒரு ஸ்கூல் இருந்தது. அங்கு ஸ்கூல் விடும் நேரமாதலால் நிறைய பெற்றோர் குழந்தைகளை அழைத்து செல்வதற்காக நின்றிருந்தார்கள். அவர்கள் நான் ஆட்டோவில் இருந்து இறங்கியதையும் பின்னர் தவிப்பதையும் பார்த்து கொண்டிருந்தார்கள்.
அவர்களிடம் சென்றேன். "நீங்கள் யாராவது எனக்கு உங்கள் மொபைல் கொஞ்சம் கொடுத்து உதவ முடியுமா?, என் கை பை ஆட்டோ வில் மிஸ்ஸாகி விட்டது. அதில் தான் என் மொபைல் இருக்கிறது. என் மொபைல் போனுக்கு போன் செய்தால் ஆட்டோ காரர் எப்படியும் என் பையை திருப்பி கொண்டு வந்து தந்து விடுவார்." என்றேன்.

ஞாயிறு, ஜூலை 17, 2011
டெஸ்ட் போஸ்ட்
யாரும் தப்பா நினைசுக்காதீங்க ! முந்தய பதிவின் போது கமெண்ட் பொட்டி காணமல் போய் விட்டது. அப்புறம் என்ன வழக்கம் போல் மாதா புவனேஸ்வரியை வேண்டிகொண்டவுடன் இந்த பதிவில் கிடைத்து விட்டது. அதனால் முந்தய பதிவுக்கான கமெண்டுகளை இந்த பதிவின் கமெண்ட் பொட்டியில் போடவும்.
வெள்ளி, ஜூலை 15, 2011
புவனேஸ்வரி மகாத்மியம் - பகுதி 1
![]() |
| என் தாய் புவனேஸ்வரி ! |
அம்மா ! தாயே பராசக்தி ! மாதே புவனேஸ்வரி ! என்பது நான் அடிக்கடி சொல்லும் வாக்கியம். இதுதான் காரணம் என்றில்லாமல் எனக்கு இந்த அம்மன் மேல் ஒரு பக்தி வந்து விட்டது. ஆனால் எனக்கும் இந்த அன்னைக்கும் ஒரு விட்ட குறை தொட்ட குறை இருக்கத்தான் செய்தது.
அது என்னவென்றால் என் தந்தையின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நல்லமாங்குடி (எவ்வளவு அழகான பெயர் பாருங்கள்). ஆனாலும் என் தாத்தா அதாவது அப்பாவின் அப்பா புதுகோட்டை மகாராஜாவின் சமஸ்தானத்தில் வருவாய் துறையில் வேலை பார்த்ததால் என் அப்பா மற்றும் அவர் உடன் பிறந்தவர்கள் எல்லோரும் பிறந்து வளர்ந்ததெல்லாம் புதுகோட்டை தானாம். அதனால் உங்கள் சொந்த ஊர் எது என்று கேட்டால் புதுகோட்டை என்று தான் சொல்வார்கள். பின்னர் சமஸ்தானங்கள் மறைந்து ஒரே பாரதமான போது என் தாத்தா மத்திய அரசு ஊழியர் ஆனார்.
புதுகோட்டை அரச பரம்பரையின் (தொண்டைமான்) குல தெய்வம் ஸ்ரீ புவனேஸ்வரி தேவியவாள்(இந்த புவனேஸ்வரி தேவியின் branch offices ஒன்று சேலத்திலும் இப்போது சென்னை சேலையுரிலும் உள்ளது). அதனால் புதுகோட்டை அரச குடும்பத்தினர் நவராத்திரி விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுவார்களாம்.
நவராத்திரியில் ஊரில் இருக்கும் எல்லா சுமங்கலி களையும் ஒரு நாள் அழைத்து எண்ணெய், சீயக்காய் கொடுத்து சாப்பாடு போட்டு வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் முதலிய மங்கள பொருட்கள் எல்லாம் தருவார் களாம். அதில் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனின் உருவம் பொறித்த அரை காசு ஒரு பிடியும் அடக்கம். அரை காசு என்பது அப்போது இருந்த ஒரு நாணய அளவாகும்.
பெண்களும் அதை ஒரு மரியாதையாக நினைத்து வாங்கி பத்திர படுத்துவார்களாம். அரை காசில் உருவம் பொறிக்க பட்டதால் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனுக்கு அரை காசு அம்மன் என்ற பெயர் ஏற்றபட்டது.
இந்த விவரங்கள் எதுவும் தெரியாமலே எனக்கு இந்த அம்மன் மேல் ஏனோ ஒரு பக்தி ஏற்பட்டது. அது வளர்ந்து வந்த போது தான் என் தந்தையார் மூலம் இந்த வரலாற்றை தெரிந்து கொண்டேன்.
யாருக்காவது எதாவது பொருள் தொலைந்து போனால் இந்த அரை காசு அம்மன்னுக்கு வேண்டிக்கொண்டால் கிடைத்து விடும். ஒரு சிறு வெல்ல கட்டியோ அல்லது எதாவது ஒரு சிறு இனிப்பு பண்டமோ எடுத்து வைத்து காணாமல் போன பொருள் கிடைக்க வேண்டும் என்று அன்னையை வேண்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த பொருள் கிடைத்தவுடன் அந்த இனிப்பு பொருளை ஒரு அசலார் குழந்தைக்கு கொடுத்துவிட வேண்டும்.
உனக்கு என்ன தொலைந்தது? எப்படி கிடைத்தது என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன் அன்னையின் மகிமையை அடுத்த பதிவில்.
.....தொடரும்.
செவ்வாய், மே 31, 2011
கதை எழுதிய கதை
எனக்கும் கதை எழுத ஆசை வந்தது. ஆனால் எதை பற்றி கதை எழுதுவது என்ற குழப்பமும் கூடவே வந்தது. ஹாச்ய கதை எழுதலாமா? அதனால் வாசகர்களுக்கு என்ன பயன்? சோக கதை எழுதினால் மட்டும் என்ன பயன் கிடைத்துவிட போகிறது?
எதை பற்றி கதை எழுதுவது? காலையில் கணவருடன் போட்ட சண்டையை பற்றி எழுதி இந்த கணவன்மார்களே இப்படித்தான் என்று கருத்து சொல்லலாமா? வேலைக்காரி வந்து சொல்லும் வம்பு கதைகளை கண், காது, மூக்கு வைத்து விரிவு படுத்தலாமா? குழந்தைகளுக்கான குட்டி கதை எழுதலாமா? இல்லை பாட்டிகளுக்கான பக்தி கதை எழுதலாமா? சமூக கதை எழுதலாமா? எனக்கு சரித்திர கதை எழுத வருமா?
இளைனர்களுக்கு பிடித்த காதல் கதை எழுதலாமா? எல்லோருக்கும் பிடித்த உண்மை கதை எழுதலாமா?
சிறுகதை எழுத ஆரம்பித்து அது தொடர் கதையாய் நீண்டு விட்டால் என்ன செய்வது?
நான் கதை எழுத யோசித்ததையே ஒரு கதையாய் எழுதி படித்து பார்த்தேன். இதில் கதை என்ற வார்த்தை எத்தனை முறை வந்துள்ளது என்று வாசகர்களுக்கு ஒரு போட்டி வைக்கலாம் என்று தோன்றியது.
என்ன எண்ணி விட்டீர்களா? எத்தனை முறை வந்துள்ளது?
என்னது பரிசா!? அது......வந்து....நான் escape !
சனி, ஏப்ரல் 02, 2011
Lose Weight Now, Ask Me How !
யாரை பார்த்தாலும் எடையை குறைக்க வேண்டும் என்பதே ஒரு பெரிய கவலையாக போய் விட்டது. இரண்டு நடுத்தர வயது பெண்கள் சந்தித்து கொண்டால் அவர்கள் பேசும் முக்கியமான விஷயம் இந்த எடை குறைப்பு தான்.
எடையை குறைக்க என்னிடம் சில யோசனைகள் உள்ளன. உங்களுக்கு சரியாக வருமா என்று பாருங்களேன்.
1. முதலில் நீங்கள் உண்மையிலேயே எடை கூடுதலாக இருகிறீர்களா என்பதை ஒரு மருத்துவர் மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள்.
2.பெரும்பாலும் பெண்கள் "நான் கல்யாண தும் போது நல்லா ஸ்லிம்மா இருந்தேங்க, இப்பதான் குண்டா ஆயிட்டேன் என்பார்கள். ஆனால் உண்மையில் திருமணத்தின் போது ஒல்லி குச்சியாக அண்டர் வெயிட் ஆக இருந்திருப்பார்கள்.
இப்போது சரியான எடையில் இருப்பார்கள் ஆனால் பார்பவர்கள் " என்ன குண்டா ஆயி டியே ! என்று விசாரித்து விசாரித்தே இவர்களுக்கு தான் குண்டாக இருகிறோம் என்ற எண்ணம் மனதில் தங்கி விடும். எனவே நீங்கள் எடை அதிகமாக இருபதாக டாக்டர் கூறினால் மட்டுமே ஏற்று கொள்ளுங்கள்.
யாராவது உங்களிடம் நீங்கள் குண்டாக இருபதாக கூறினால் அதை பற்றி கவலை படாமல் "இல்லை நான் நோர்மல் வெயிட் தான் இருகிறேன் என்று டாக்டர் கூறினார்" என்று சொல்லி விடுங்கள்.
3.உண்மை இலேயே குண்டாக இருபவர்கள் எடை குறைபிற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
4.தாளிக்க மட்டுமே எண்ணெய் பயன்படுத்தும் கூட்டு, கறி,சாம்பார்,ரசம்,பச்சடி போன்ற தென் இந்திய உணவு பண்டங்களை மட்டுமே வாரத்தில் ஆறு நாட்களும் உண்ணவும். வார இறுதி நாளான சண்டே மட்டும் ஹோட்டல் லுக்கு போய் கொள்ளலாம்.
5.நீங்கள் சரியான எடையில் இருந்தாலும் தினமும் அரை மணி நேர உடற் பயிற்சி என்பதை கட்டயமாகி கொள்ளுங்கள். இரவில் அதிக நேரம் கண் விழிக்காதீர்கள். 7 மணி நேர இரவு தூக்கத்தை கட்டாயமாகி கொள்ளுங்கள்.
6.பச்சை மிளகாய் வாங்க பக்கத்துக்கு கடைக்கு போக பைக்கை எடுகாதீர்கள். எல்லா இடங்களுக்கும் நடந்தே போக பழகுங்கள்.
7.பாதாம்,பிஸ்தா,முந்திரி போன்ற உலர் பழ வகைகள் கொழுப்பை குறைக்க உதவுவதாக இப்போது கண்டு பிடித்து உள்ளார்கள். எனவே, ஐயயோ அதெல்லாம் கொழுப்பு பா எனக்கு வேண்டாம் என்று கூறாதீர்கள்.
தினமும் ஒரு கை பிடியளவு சாப்டலாம்.
8.பழங்கள், பச்சை காய் வகைகள் ஆகியவற்றை அதிகமாக்கி சாதத்தை குறைத்து கொள்ளுங்கள்.
9.மேலும் எடையை குறைக்க தகுந்த காலம் தை முதல் ஆடி வரை. அப்போது தான் பண்டிகைகள் அதிகமாக இருக்காது. கொழுக்கட்டை,சீடை,முறுக்கு போன்ற எண்ணெய் பட்சணங்களை அதிகமாக சாப்பிட வேண்டி இருக்காது. கல்யாண சீசன் ஆச்சே ! என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் கல்யாணங்களில் நீங்கள் ஒரு ஸ்வீட் சாபிட்டால் பரவா இல்லை. வீட்டில் செய்தால் குண்டானோடு சாப்பிடு விர்களே !
10.கடைசியாக, ஆனால் முக்கியமான விஷயம் எல்லோரிடமும் "நான் டயிட்இல் இருகிறேன் என்று பீ த்தி கொண்டு திரியாதீர்கள். சொல்லில் வேகத்தை காட்டிவிட்டால் செயலுக்கு வேகம் இருக்காது. "என்ன இளைத்து விட்டாயே", என்று யாராவது கேட்டாலும், "ஓ! அப்படியா "என்று கேட்டுவிட்டு முடித்து விடுங்கள்.
வெள்ளி, ஏப்ரல் 01, 2011
muthal muyarci.
இது என் முதல் முயற்சி. இது வெற்றி பெற ஆனை முக கடவுள் முதலான அனைத்து தெய்வங்களையும் வணங்கு கிறேன். நான் தொடங்கி இருக்கும் இந்த ப்ளாக் ஆல் மற்றவர்களுக்கு நன்மையே விளைய வேண்டும்.
நன்றி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)