புதன், ஆகஸ்ட் 27, 2014

சன் ஸ்க்ரீன் லோஷன்


”என் கையெல்லாம் கருப்பா, சுருக்கம் சுருக்கமா இருக்கு பாரேன் உஷா, இதுக்கு என்ன பண்ணலாம்?”

வாயில் நூலை கவ்வியபடி என் புருவத்தை ராவிக்கொண்டிருந்த உஷா ஒரு கணம் அதை நிறுத்திவிட்டு என் கைகளை உற்று பார்த்தாள்.

“ம்…ம்..சன் டான்ஸ். வெளியில போகும் போது எதாவது சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டுக்கோ.”

”நான் தான் வெளியிலயே போறதில்லையே. மிஞ்சி போனா மாடிக்கு துணி உலர்த்த போவேன் அவ்வளவுதான்.”

“அதுவே போதும் சன் டான்ஸ் வர்றத்துக்கு. சன் ஸ்க்ரீன் போட்டுக்கோ.”

“ஆனா மூஞ்சியும் தானே வெயில்ல காயறது. அது கருப்பா ஆகவேயில்லீயே?”

காசியில் வேண்டாத கஸ்டமரையும் விட்டுவிடலாம் என்று ஒரு விதியிருந்திருந்தால் உஷா ஐந்து வருடங்களுக்கு முன்பே என்னை காசியில் தத்தம் கொடுத்திருப்பாள். அவளை பொறுத்தவரையில் நான் ரெகுலர் கஸ்டமர் இல்லை, ரெகுலர் கஷ்டமர்.

“சன் ஸ்க்ரீன் போட்டுக்கோ, அவ்வளவு தான்.” என்றாள் அழுத்தமாக.
--------------------------------------------------------------------------------------

”ஏண்டீ ப்ரியா ! என் கையெல்லாம் கருப்பா, சுருக்கம் சுருக்கமா இருக்கே, உஷா எதாவது சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டுக்க சொல்றா, என்ன போட்டுக்கலாம்?”

”அட ஆமாக்கா ! கருப்பா, சுருக்கமாத்தான் இருக்கு. இதெல்லாம் வயசானாதானே வரும்” என்றவள் நான் முறைப்பதை பார்த்துவிட்டு “அதான் உங்களுக்கு எப்படின்னு தான் யோசிக்கிறேன். நான் ரெகுலரா வாங்கற கடையிலயே ஹெர்பல் ப்ராடெக்ட்ஸ் இருக்கு. வாங்கி தரேன்.”
---------------------------------------------------------------------------------------------

”ஒரு பாட்டில் 250 ரூபாயா? ரொம்ப வேஸ்ட் ப்ரியா. இவ இதையெல்லாம் கேப்பாளே தவிர நாலு நாள் கூட யூஸ் பண்ணமாட்டா. இது அட்டர் வேஸ்ட்.”

“அதொன்னும் வேஸ்டில்ல அத்திம்பேர், இது ஹெர்பல் தான் மூணு வருஷம் ஷெல்ப் லைப் இருக்கு.”

”என்னவோ போ ! மூணு வருஷம் இல்ல முப்பது வருஷம் ஆனாலும் இது அப்படியே தான் இருக்கும்.”

“வாயவச்சுண்டு சும்மாவே இருக்க முடியாதா உங்களால, எத ஆரம்பிச்சாலும், அது நடக்காது, உருப்படாதுன்னு தொஸ்கு சொல்லிண்டு.”
---------------------------------------------------------------------------------------------

இது நடந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில், போன வாரம் ப்ரியா வந்திருந்த போது ஷெல்பை குடைந்தவள்,”அக்கா இந்த சன் ஸ்க்ரீன் லோஷனை யூஸ் பண்ணலையாக்கா? “

“நான் எங்கடீ வெளியில போறேன் இதை போட்டுக்க? அதோட கொஞ்சம் சூரிய வெளிச்சம் மேலபடறது தான் நல்லதாமே!!”

“இதையெல்லாம் இப்ப யோசிக்கிறவ எதுக்கு இதை வாங்கணும். நான் அப்பவே சொன்னேன். கேட்டாத்தானே.”

“எல்லாம் நான் யூஸ் பண்ணுவேன். நீங்க பேசாம இருங்கோ.”

”அக்கா ! நீங்க தான் இப்போ ஆபீஸ் போறீங்கல்ல, போட்டுக்கலாமே?”

“அது காலங்கார்த்தால வெயில் வர்றத்துக்குள்ளயே ஆபீஸ் போயிடறோம், அங்க உள்ளயே தானே இருக்கோம். அப்புறம் வெயில் போனவிட்டு தானே வீட்டுக்கு வர்றோம். அதோட எனக்கு மறந்து போயிடறது ப்ரியா.”

பவர் ஸ்டார் மாதிரி மண்டையை ஆட்டி “ம்…ம்… மறந்து போயிடறதுங்கறது தான் நிஜம். மத்ததெல்லாம் சாக்கு.”

“ஆமா, சாக்கு, கோணின்னுண்டு, பேசாம இருங்கோ. நான் நாளையில இருந்து போட்டுக்கறேன் ப்ரியா.”

இன்று காலை மறக்காமல் சன் ஸ்க்ரீன் லோஷனை எடுத்து போட்டுக்கொண்ட போது, “எந்த காலேஜ் படிக்கிறீங்க?”

“காலேஜா???, நானா!!!!”

”மம்,..,மீ” சிந்து வந்து காலை கட்டிக்கொள்ள, கேட்டவர்கள் வாய்பிளந்து பார்த்தார்கள். கற்பனையே அழகாக இருந்தது.

செருப்பை மாட்டி வெளியில் வந்த போது, ரெண்டு மூன்று மழை துளிகள் என் மேல்பட்டு தெறித்தன. அன்னாந்து பார்த்தேன். என்ன கொடுமை இது? இன்றைக்கென்று பார்த்து சன்னே மேக ஸ்க்ரீனுக்குள்.

7 கருத்துகள்:

ஹுஸைனம்மா சொன்னது…

ஹா.. ஹா... கிச்சன் எக்யுப்மெண்ட்ஸ்தான் இப்படி வாங்கி வைச்சு இடம் அடைக்கும் எனக்கு...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கடைசியில் சூரியனும் மறைந்துகொண்டானோ ஸ்கிரீனுக்குள்?

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஹா... ஹா.... கலக்கல்.

சுசி சொன்னது…

@ஹுசைனம்மா : கிச்சன் எக்யுப்மெண்ட்சும் இருக்கு. ரொட்டி சுடற வலை இப்படி. அப்புறம் அதை தனி போஸ்டா போடறேன். :)

சுசி சொன்னது…

@ராஜராஜேஸ்வரி : ஆமாம் மேடம் ! வாங்கின சன் ஸ்கிரீன் லோஷனை அவரும் போட்டுகிட்டார் போலிருக்கு.

சுசி சொன்னது…

@சே.குமார் : நன்றி சார்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//ரெகுலர் கஸ்டமர் இல்லை, ரெகுலர் கஷ்டமர். //

சூப்பர்........

//மம்,..,மீ” சிந்து வந்து காலை கட்டிக்கொள்ள, கேட்டவர்கள் வாய்பிளந்து பார்த்தார்கள். கற்பனையே அழகாக இருந்தது.//

எங்கேயோ போய்டீங்க....