நான் சின்ன
குழந்தையா இருக்கிறச்சே என்னை தூக்கிண்டு
“அவர்கள்” சினிமாவுக்கு போனாங்களாம் எங்க அம்மா,
அப்பா. அங்க ஸ்கிரீன்ல வந்த “மேரி பிஸ்கெட்” அட்வர்டைஸ்மெண்ட பார்த்து,”ஹை ! பிச்சி ! பிச்சி
!” ந்னு (பக்கி மாதிரி) கத்தினேனாம்.
இது தான் என் முதல் தியேட்டர் அனுபவம் பற்றிய பதிவு.
அப்புறம் “வறுமையின் நிறம் சிவப்பு”
பார்க்க போயி என் தம்பியும், கசினும் தொலைஞ்சு
போயி கிடைச்சது. “துடிக்கும் கரங்கள்” பார்க்க
போயி என் சின்ன தம்பி விடாம அழுததால பாதியிலேயே திரும்பி வந்தது. இதெல்லாம் நிழலா நியாபகம் இருக்கிற விஷயங்கள்.
முதல்
முதலா வந்த 3டி படமான “மை டியர் குட்டிச்சாத்தான்” பார்க்கறச்சே அந்த கண்ணாடிய கீழ குனிஞ்சு போட்டுண்டுட்டு நிமிரவும்.
படத்துல மந்திரவாதி ஏதோ ஒரு நெருப்பு சக்கிரம் மாதிரி ஒன்னுத்த விடவும்
சரியா இருந்துது. நெருப்பு சக்கிரம் மூஞ்சிகிட்ட வர பயந்து “வீல்!”ன்னு கத்தினது இன்னமும் நன்னா ஞாபகம் இருக்கு.
அப்புறம்
கமலா தியேட்டர்ல “தர்ம துரை” படம் பார்க்க நானும், தம்பிகளும், மாமா பசங்களும் போயிட்டு, டிக்கெட் குடுக்க ஆரம்பிக்கறச்சே பணம் போறாதுன்னு தெரிஞ்சு போயி என் மாமா பையன்
வீட்டுக்கு பஸ்புடிச்சு போயி பணம் எடுத்துட்டு வந்து டிக்கெட் வாங்கினது. பின்ன, ரஜினி படமாச்சே டிக்கெட் கிடைக்குமா?
ஒன்பதாம்
கிளாஸ் படிக்கிறச்சே, கூடபடிக்கிற கிராமத்துலர்ந்து வந்த பொண்ணு அவங்க அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட்ன்னும்
அவர் சினிமா பார்க்க விடமாட்டார்ன்னு சொல்லி எப்படியாவது ஒரு சினிமாவுக்கு கூட்டிகிட்டு
போகும்படியா கெஞ்சினா. நாம தான் ஊருக்கு உபகாரியாச்சே.
எங்க அப்பா கிட்ட சொல்லி பாவம்ன்னு சினிமாவுக்கு அவள கூட்டிண்டு போக
பர்மிஷன் வாங்கினேன். குறிப்பிட்ட அந்த நாள் என்னமோ எங்க ஸ்கூலுக்கு
மட்டும் லீவா போன ஒரு ஒர்கிங் டே. பார்த்தா காலங்கார்த்தால எட்டு
மணிக்கெல்லாம் எங்க வீட்டுக்கு வந்து நிக்கறா. ராத்திரியெல்லாம்
எக்ஸைட்மெட்ல தூங்கியே இருக்க மாட்டா போலிருக்கு.
”ஏய் ! எங்க அப்பாகிட்ட உங்க அப்பா எனக்கும் சேர்த்து
டிக்கெட் வாங்கிட்டதால நான் போயிதான் ஆகணும்ன்னு சொல்லிட்டு வந்திருக்கேம்மா.
ப்ளீஸ்ப்பா ! சீக்கிரம் போலாம்ப்பா !” என்று கெஞ்சினாள்
.
.
சரின்னு
கிளம்பினோம். எந்த தியேட்டர்ல காலங்கார்த்தால படம் போடுவாங்க. நான்
கொஞ்சம் லேட்டா போகலாம்ன்னு சொன்னாலும் அந்த பொண்ணு கேக்கல. ஒவ்வொரு
தியேட்டரா போய் கேவலமா “எப்ப படம் போடுவீங்க?”ன்னு கேட்டுண்டே போனோம். எனக்கா மகா எரிச்சல். ஆனா, பாவம்
அவளுக்கு ஆசை வெட்கம் அறியவில்லை. எதாவது ஒரு படம் பார்த்தே ஆகணும்ன்னு
ஒரே அடம். கடைசில, இப்போ “பத்மராம் கல்யாண மண்டபமா” இருக்கிற “ராம்” தியேட்டர்ல ஒரு ராமராஜன், கௌவுதமி நடிச்ச படம் பார்த்தோம். அதுக்கு தியேட்டர் வாசல்லயே
திறக்கரவரைக்கும் காத்திண்டிருந்து முதல் ஆளா டிக்கெட் வாங்கினோம். அந்த தியேட்டர் வாச்மேன் எங்களை ஒரு மாதிரியா பார்த்தான்.
கிரோம்பேட்டையில
இருக்கிறச்சே என் மாமா பசங்க வந்தா ஒரு சினிமா கட்டாயம் பார்ப்போம். அப்படி ஒரு தடவை ஒரு அம்பது
ரூபாய் நோட்டை எடுத்துண்டு வெற்றி தியேட்டருக்கு போனோம். (அப்போல்லாம்
அந்த அம்பது ரூபாய்ல நாங்க அஞ்சு பேரும் படம் பார்க்கலாம்). என்
தம்பிகிட்ட தான் பணம் இருந்துது. “போயி டிக்கெட் வாங்குடா!”ன்னா “பணத்த காணோம்”ங்கிறான்.
“ஏய் ! சும்மா விளையாடாதடா!”ன்னேன். “இல்லக்கா! நிஜம்மாவே காணோம்!”
கொஞ்ச நேர விசாரிப்புகளுக்கு பின் நிஜமாவே பணம் தொலைஞ்சு போச்சுங்கர
விவரம் எனக்கு புரிஞ்சிடுத்து. எங்களுக்குள்ள நடக்குற இந்த கான்வர்ஷேஷன்ஸ
ஒருத்தன் பார்த்துண்டே இருந்தான். இதை பார்த்தவுடனே அவன் தான்
திருடன்னு நாங்க முடிவு பண்ணிட்டோம்.
நேரா பக்கத்துல
இருக்கிற கிரோம்பேட் போலீஸ் ஸ்டேஷன் போனோம்.அங்க எங்களோட அம்பது ரூபா காணாம போயிடுத்துன்னு கம்ப்ளைண்ட் பண்ணினோம்.அங்க இருந்த போலீஸ்காரர்,”எங்க வுட்டீங்க பசங்களா?
நல்லா தேடிபாருங்க”ன்னாரு. நாங்க உடனே “சார் ! ஒருத்தன் எங்களையே
உத்து பார்த்துகிட்டு இருந்தான். அவன் தான் திருடியிருக்கணும்.
அவன் எங்க கிட்டயிருந்து திருடின பணத்துல படம் பார்க்கிறத்துக்காக தியேட்டர்லயே
காத்துகிட்டிருக்கான். வந்து உடனே அரஸ்ட் பண்ணுங்க சார்!”ன்னோமே பார்க்கணும்.
சுத்தி
இருந்த மத்த போலீஸ்காரங்கள்ளாம் சிரிச்சாலும் அந்த பெரிய போலீஸ் மட்டும் “அம்பது ரூபாய்க்க்கல்லாம்
அரஸ்ட் பண்ண முடியாது பசங்களா.”ன்னு ஏதோ சமாதானமெல்லாம் சொல்லி
திருப்பி அனுப்பிட்டார். வீட்டுக்கு வந்தா, “சினிமா பார்க்க குடுத்த பணத்த தொலைச்சிட்டா வேற பணமெல்லாம் இல்ல. வெறும்ன்ன மோட்டுவளைய பார்த்துண்டு ஒக்காந்துண்டு இருங்கோ.”ன்னு அம்மா திட்டிட்டா. வெறும்ன்ன மோட்டுவளைய பார்த்துண்டு
ஒக்காந்துண்டு இருக்கிறத்துக்கா சம்மர் லீவு விட்டிருக்கு? நாங்க
வழக்கம் போல வீட்ட சுத்தி ஓடி மாடி, சுவர், மரம் எல்லாம் ஏறிகுதிச்சு எங்களால முடிஞ்ச அளவுக்கு அக்கம்பக்கத்துல இருக்கற
வயசானவாளையெல்லாம் மத்தியானத்துல தூங்கவிடாம நன்னா படுத்தி நாங்க படம் பார்க்க முடியாம
போன ஆத்திரத்தை தீர்த்துண்டோம்.
தியேட்டர்
எஃபெக்ட்ஸ் தொடரும்……
2 கருத்துகள்:
கோபம் தீர்க்க இப்படி ஒரு வலி(ழி)...!
அது சரி... பார்ட் 1, 2, ..... போடற அளவு அனுபவங்களா! பேஷ் பேஷ் :)
கருத்துரையிடுக