சனி, ஏப்ரல் 02, 2011

Lose Weight Now, Ask Me How !

யாரை பார்த்தாலும் எடையை குறைக்க வேண்டும் என்பதே ஒரு பெரிய கவலையாக போய் விட்டது. இரண்டு நடுத்தர வயது பெண்கள் சந்தித்து கொண்டால் அவர்கள் பேசும் முக்கியமான விஷயம் இந்த எடை குறைப்பு தான்.

எடையை குறைக்க என்னிடம் சில யோசனைகள் உள்ளன. உங்களுக்கு சரியாக வருமா என்று பாருங்களேன்.

1. முதலில் நீங்கள் உண்மையிலேயே எடை கூடுதலாக இருகிறீர்களா என்பதை ஒரு மருத்துவர் மூலமாக உறுதி செய்து கொள்ளுங்கள்.

2.பெரும்பாலும் பெண்கள் "நான் கல்யாண தும் போது நல்லா ஸ்லிம்மா இருந்தேங்க, இப்பதான் குண்டா ஆயிட்டேன் என்பார்கள். ஆனால் உண்மையில் திருமணத்தின் போது ஒல்லி குச்சியாக அண்டர் வெயிட் ஆக இருந்திருப்பார்கள்.

இப்போது சரியான எடையில் இருப்பார்கள் ஆனால் பார்பவர்கள் " என்ன குண்டா ஆயி டியே ! என்று விசாரித்து விசாரித்தே இவர்களுக்கு தான் குண்டாக இருகிறோம் என்ற எண்ணம் மனதில் தங்கி விடும். எனவே நீங்கள் எடை அதிகமாக இருபதாக டாக்டர் கூறினால் மட்டுமே ஏற்று கொள்ளுங்கள்.

யாராவது உங்களிடம் நீங்கள் குண்டாக இருபதாக கூறினால் அதை பற்றி கவலை படாமல் "இல்லை நான் நோர்மல் வெயிட் தான் இருகிறேன் என்று டாக்டர் கூறினார்" என்று சொல்லி விடுங்கள்.

3.உண்மை இலேயே குண்டாக இருபவர்கள் எடை குறைபிற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

4.தாளிக்க மட்டுமே எண்ணெய் பயன்படுத்தும் கூட்டு, கறி,சாம்பார்,ரசம்,பச்சடி போன்ற தென் இந்திய உணவு பண்டங்களை மட்டுமே வாரத்தில் ஆறு நாட்களும் உண்ணவும். வார இறுதி நாளான சண்டே மட்டும் ஹோட்டல் லுக்கு  போய் கொள்ளலாம். 

5.நீங்கள் சரியான எடையில் இருந்தாலும் தினமும் அரை மணி நேர உடற் பயிற்சி என்பதை கட்டயமாகி கொள்ளுங்கள். இரவில் அதிக நேரம் கண் விழிக்காதீர்கள். 7 மணி நேர இரவு தூக்கத்தை கட்டாயமாகி கொள்ளுங்கள்.

6.பச்சை மிளகாய் வாங்க பக்கத்துக்கு கடைக்கு போக பைக்கை எடுகாதீர்கள். எல்லா இடங்களுக்கும் நடந்தே போக பழகுங்கள்.

7.பாதாம்,பிஸ்தா,முந்திரி போன்ற உலர் பழ வகைகள் கொழுப்பை குறைக்க உதவுவதாக இப்போது கண்டு பிடித்து உள்ளார்கள். எனவே, ஐயயோ அதெல்லாம் கொழுப்பு பா எனக்கு வேண்டாம் என்று கூறாதீர்கள்.

தினமும் ஒரு கை பிடியளவு சாப்டலாம்.

8.பழங்கள், பச்சை காய் வகைகள் ஆகியவற்றை அதிகமாக்கி சாதத்தை குறைத்து கொள்ளுங்கள்.

9.மேலும் எடையை குறைக்க தகுந்த காலம் தை முதல் ஆடி வரை. அப்போது தான் பண்டிகைகள் அதிகமாக இருக்காது. கொழுக்கட்டை,சீடை,முறுக்கு போன்ற எண்ணெய் பட்சணங்களை அதிகமாக சாப்பிட வேண்டி இருக்காது. கல்யாண சீசன் ஆச்சே ! என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் கல்யாணங்களில் நீங்கள் ஒரு ஸ்வீட் சாபிட்டால் பரவா இல்லை. வீட்டில் செய்தால் குண்டானோடு சாப்பிடு விர்களே !

10.கடைசியாக, ஆனால் முக்கியமான விஷயம் எல்லோரிடமும் "நான் டயிட்இல் இருகிறேன் என்று பீ த்தி கொண்டு திரியாதீர்கள்.  சொல்லில் வேகத்தை காட்டிவிட்டால் செயலுக்கு வேகம் இருக்காது. "என்ன இளைத்து விட்டாயே", என்று யாராவது கேட்டாலும், "ஓ! அப்படியா "என்று கேட்டுவிட்டு முடித்து விடுங்கள். 


வெள்ளி, ஏப்ரல் 01, 2011

muthal muyarci.

இது என் முதல் முயற்சி. இது வெற்றி பெற ஆனை முக கடவுள் முதலான அனைத்து தெய்வங்களையும் வணங்கு கிறேன். நான் தொடங்கி இருக்கும் இந்த ப்ளாக் ஆல் மற்றவர்களுக்கு நன்மையே விளைய வேண்டும்.


நன்றி.