வியாழன், ஜனவரி 12, 2012

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் (ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்களுக்கான பதிவு)


"இது சனி பெயர்ச்சியா தானே இருக்க முடியும் !? எப்படி ராகு-கேது பெயர்ச்சியாச்சு!?"ன்னு நீங்க யோசிக்கலாம். வாஸ்தவம் தான் இந்த க்ரஹமும் சனி அத்தனைக்கு பொல்லாதது தான். ஆனால் சனிக்கு மகரம், கும்பம்னு இரண்டு சொந்த வீடுங்க இருக்கே. இந்த க்ரஹதுக்கு சொந்தமா ஒரு வீடும் கிடையாது. அது மட்டுமில்லாம இந்த கிரஹத்தோட ஜோடி கிரஹமும் இதுவும் எப்பவும் எதிர் எதிர் திசையில தான் இருக்கும்,யோசிக்கும்,செய்யும். அதனால இந்த கிரஹத்த ராகுனும் இதன் ஜோடி கிரஹத்த கேதுனும் வச்சிக்கலாம்.

இந்த ராகு-கேது பெயர்ச்சியானது இந்த மாச கடைசில நிகழ போகிறது. ரொம்ப வருசத்துக்கு பிறகு நடக்கிற ஒரு அதிசய வானவியல் நிகழ்வுங்கிறதால இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

பலன்கள் : இந்த கிரக  பெயர்ச்சியினால பதிவுலகத்துக்கு மகத்தான நற்பலன்கள் ஏற்பட போகின்றது. எப்படியும் இந்த கிரகம் அடுத்த வீட்டுக்கு போய் அந்த பலன்களை தரத்துக்கு ஒரு மாசமாவது ஆகுமே! பின்ன, போன் கனெக்சன் மாத்தி நெட் கனெக்சன் திரும்பவந்து, அங்க சாமான்களை எல்லாம் அரேஞ்சு பண்ணி செட்டில் ஆகிட்டு அப்புறமா தானே மற்றவர்களை படுத்துவதை பற்றி யோசிக்க முடியும். ஆக, இந்த பெயர்ச்சியினால் பதிவுலக மக்கள் அனைவருக்கும்  மொக்கை போஸ்டுகளில் இருந்தும். ரம்ப கமெண்ட்ஸ்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். மொத்தத்தில் சொல்ல போனால் இந்த பெயர்ச்சியால் இந்த கிரகம் தான் பாடாய் பட போகிறது. 

இந்த கிரகம் போகிற புது ராசியின் பக்கத்துக்கு ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த கிரகத்தின் உப கிரகங்கள் இந்த கிரகத்தை விட பொல்லாதவை, அதிக வீரியமுள்ளவை. அவை எப்போதும் தான் இருக்கும் வீட்டில் இருந்து பக்கத்துக்கு வீடுகளை பார்க்கும் தன்மை உடையவை ஆதலால் கூடுதல் எச்சரிக்கை அவசியமாகிறது.

வக்கிர காலம் : இந்த அறிவிப்பு வெளியான உடனே கிரக பெயர்ச்சி ஏற்பட்டு விடாது. எனவே, அவ்வப்போது இந்த கிரகம் வக்கிரமாகி மீண்டும் பதிவுலகை தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பரிகாரம் : இந்த கிரகத்தை புகழ்ந்து தினமும் ஆயிரத்தெட்டு கமெண்டுகளால் அர்ச்சித்தால் கிரக தோஷம் நீங்கி அளவற்ற நற்பலன்களை பெறலாம்.


பின் குறிப்பு : ஹி....ஹி.....ஹி... வீடு மாத்த போறோம். அதுக்குதான் இந்த பதிவு.


அனைவருக்கும் என் உளங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

12 கருத்துகள்:

RAMA RAVI (RAMVI) சொன்னது…

தானைத்தலைவி அவர்களுக்கு “ஜோதிட சிகாமணி” என்கிற பட்டப்பெயரை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

RAMA RAVI (RAMVI) சொன்னது…

இந்த அர்ச்சனை போதுமா??

பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Under the Mango Tree சொன்னது…

ennum konjam errukkum endru ninaippathukkul mudinthuvitathu pol therighiradhu

சுசி சொன்னது…

@ ராம்வி : நன்றி ரமாஜி ! என்னது அர்ச்சனை போதுமாவா!? ஆயிரத்தெட்டுன்னு சொல்லிருக்கேன்! கிரக தோஷம்! ஞாபகமிருக்கட்டும். :))))

@under the mango tree : ஆமாம் அக்கா ! ரொம்ப யோசிக்க டைம் இல்லாததால கொஞ்சமா எழுதவேண்டியதா போச்சு. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அக்கா.

LK சொன்னது…

hihi seekiram vaanga

- LK

Kavinaya சொன்னது…

அப்படியா சேதி :) வாழ்த்துகள்!

ஹுஸைனம்மா சொன்னது…

என்னா வில்லத்தனம்! :-)))

சீக்கிரமே வாங்க.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

ஓ... இதுல இவ்ளோ மேட்டர் இருக்கா? ஒகே ஒகே... புது வீட்டுக்கும் வாழ்த்துக்கள் தலைவி அக்கா..:)

RAMA RAVI (RAMVI) சொன்னது…

தானைத்தலைவி, எனது “விருது” பதிவில், எனக்கு கிடைத்த ஒரு விருதினை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.

சுசி சொன்னது…

@ தங்கமணி,கவிநயா,ஹுச்சைனம்மா,எல்.கே : அனைவருக்கும் என் நன்றிகள்.



@ ராம்வி : விருதுக்கு நன்றி ரமாஜி.

R. Gopi சொன்னது…

:-))))

சுசி சொன்னது…

thanks gopi!