திங்கள், ஆகஸ்ட் 29, 2011

கடை நிலை ஊழியர்கள் - (தொடர் பதிவு) இறுதி பகுதி.



 மீனாம்மா :  மீனாம்மாவின் உண்மையான பெயர் இன்றுவரை எனக்கு தெரியாது. மீனாவின் அம்மா மீனாம்மா அவ்வளவு தான். மீனாம்மாவிற்கு மூன்று குழந்தைகள். ஒரு மகன், இரண்டு மகள்கள். மீனாதான் கடைசி. 

சின்னவள் பிறந்த பின் இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு வீட்டு வேலைகளை செய்ய ரொம்ப கஷ்டமாக இருந்ததால் கீழ் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மீனாம்மாவை வேலைக்கு வைத்து கொண்டேன்.

நகர்புற வீடுகளில் வேலை செய்யும் பெண்மணிகளின் சகல லக்ஷணங்களும் மீனாம்மாவிடம் இருந்தன. குடிகார கணவன்,பொறுப்பில்லாத குழந்தைகள், எப்போதும் தேவைகள், சொல்லாமல் மட்டம் போடுவது முதலியன.

அவள் குழந்தைகளிலேயே மீனா தான் பொறுப்பு உள்ளவள். பதிமூன்று, பதினான்கு வயதிருக்கும், தன் அம்மாவிற்கு உதவியாக வந்து வேலை செய்யும். நகராட்சி பள்ளியில் படித்து வந்தாள்.  நான் அடிக்கடி மீனாம்மாவிடம்,"மீனாவை வீட்டு வேலை செய்ய வைக்காதீங்க மீனாம்மா." என்று கண்டித்து கொண்டே இருப்பேன். எப்போதும் பொறுப்பானவர்களிடம் தான் எல்லோரும் அதிகமாக எதிர்பார்கிறார்கள். மீனாவை வஞ்சித்து அவள் சகோதரனுக்கும், சகோதரிக்கும் அதிகமாக செய்வாள் மீனாம்மா. எனக்கு அதில் வருத்தம் தான். ஆனால் அடுத்தவர் வீட்டு விஷயத்தில் நாம் எப்படி தலையிட முடியும்?

அதே காலகட்டத்தில் என் அம்மா வீட்டில் அஞ்சம்மா என்பவர் வேலை செய்து வந்தார். தலைவர் அங்கு சென்றால் "FIVE MUMMY வந்தாச்சா?" என்று விளையாட்டாக கேட்டு வந்தார். உடனே என் சகோதரர்கள்,"அதென்ன உன் வீட்டுக்காரர் எங்க வீட்டு வேலைகாரம்மாவுக்கு பெயர் வைப்பது?  நாங்கள் உங்கள் வீட்டு வேலைகாரம்மாவுக்கு பெயர் வைக்கிறோம் ,"FISH MUMMY" என்று பெயர் வைத்து விட்டார்கள்.

மீனாம்மாவிற்கும் தலைவருக்கும் எட்டாம் பொருத்தம் தான். "அந்தம்மா நல்லா பெருக்க மாட்டேன்குது, சுத்தமா தொடைக்க மாட்டேன்குது, அத ஏன் வேலைக்கு வச்சிருக்க? அனுப்பிடு !" இப்படி தினமும் என்னை படுத்துவது போதாதென்று அந்தம்மாவிடமும்,"மீனாம்மா அங்க பாருங்க தூசி, இங்க சரியாய் தொடைங்க !" என்று விரட்டி கொண்டே இருப்பார்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் மீனாம்மாவிற்கு  நான் போடும் டீ பிடிக்காதாம். தலைவர் போடும் டீ தான் பிடிக்குமாம். "அந்த வீட்டுல்ல அந்த ஐயா தான் நல்லா டீ போடுவாரு, அந்தம்மா டீ வேணுமான்னு கேட்டா நான் வேணாமுன்னு சொல்லிடுவேன்." என்று கீழ் வீட்டில் சொன்னாளாம். 

இதை நான் சொன்னதும் தலைவர்,"பார்த்தாயா ! நானா கொண்டு உன் டீயை அட்ஜஸ்ட் பண்ணி குடிக்கிறேன். " என்று சொல்லி சிரித்தார்.

இதை படித்தால், தக்குடு தங்கமணிக்கு "இட்லிமாமி" என்று பெயர் வைத்தது போல் எனக்கும் "டீ டீச்சர்" (tea masterக்கு பெண்பால்) என்று பெயர் வைக்க கூடும்.

கடைசியில் தலைவரின் ஆசை நிறைவேறியது. மீனாம்மா நிறைய வீடுகளில் வேலை செய்ய ஆரம்பித்ததால், குறித்த நேரத்திற்கு வருவதில்லை. அவளாலும் இங்கு தொடர முடியவில்லை. கை வலி, கால் வலி என்று சொல்லிக்கொண்டு மூன்று வருடங்களாக நானே எல்லா வேலைகளையும் செய்வது தொடர்கிறது.

இந்த பதிவை தொடர நான் அழைபவர்கள் : 

மதுராகவி ரமாஜி : என் முதல் வாசகி, தற்சமயம் வரையில் ஒரே வாசகியும் கூட. அவரை நான் அழைப்பது "வாசகிக்கு மரியாதை" என்ற முறையில்.
UNDER THE MANGO TREE (லலிதா அக்கா) : சென்னை மாவடி வைகும் இவர் முறையில் எனக்கு தமக்கை என்றாலும், தோழி,குரு,நலம் விரும்பி என்று பல பல அவதாரங்களை எடுத்து எனக்கு வழி காட்டுபவர். இவரை உங்களுக்கு காட்டுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தக்குடு : என்னதான் என்னை "ஓசி பேப்பர்" என்று கிண்டல் செய்தாலும், நான் இவரை இந்த தொடரை தொடர அழைத்திருக்கும் காரணம் ஆண்களுக்கு 33% பிரதிநிதித்துவம் தருவதற்காக என்று நான் சொன்னால் அது உண்மையல்ல. எனக்கு பதிவுலகில் வேறு யாரையும் தெரியாது என்பது தான் உண்மை. தக்குடுவின் நகைச்சுவை  ததும்பும் எழுத்து வன்மையும் ஒரு காரணம்.

19 கருத்துகள்:

RAMA RAVI (RAMVI) சொன்னது…

மிகவும் நன்றாக இருக்கு உங்க பதிவு.
"வாசகிக்கு மரியாதை" க்கு நன்றி
தொடர்பதிவிர்க்கு அழைத்தமைக்கும் நன்றி.

குறையொன்றுமில்லை. சொன்னது…

தானைத்தலைவி, அப்பாடா, உங்க பக்கம் இப்பதான் ஓபனாகுது. வந்துட்டேன். நல்லா இருக்கு பதிவு.
ஃபிஷ மம்மியும், ஃபைவ் மம்மியும் அமர்க்களம்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

ஹா ஹா ஹா... டீ டீச்சர் தானை தலைவி வாழ்க... யாருப்பா இவங்கள இந்த தொடர் பதிவுக்கு கூப்ட்டது... நானே பரவால்ல... ஒரு எபிசொட் தான் போடுவேன்... இந்த தலைவலி சாரி தலைவி மூணு போஸ்ட்...ஹா ஹா ஹா... இனி யாரும் என்னை திட்ட முடியாதே...:))

ஜோக்ஸ் அபார்ட் - நல்லா எழுதி இருக்கீங்க தலைவி அக்கா... எனக்கு ரெம்ப பிடிச்ச கேரக்டர் முத்தம்மா தான்...:)

சுசி சொன்னது…

@ RAMVI

நன்றி ரமாஜி,

உங்கள் அனுபவங்களையும் பதிவிடுங்கள்.


@ LAKSHMI

நன்றி லக்ஷ்மி அம்மா,

சென்னைக்கு கூட ஈசியா வந்துடலாம் இந்த தலைவிய ப்ளோக்ல கண்டுபுடிச்சி வரது கஷ்டமா இருக்கேன்னு நினைசிருபீங்களே? என் profile page ஐ எதோ தேவ ரகசியம் மாதிரி பிளாக் பண்ணிட்டேன். அதனால தான் இத்தனை நாளா யாரும் வர முடியலை. இப்ப மாத்திட்டேன்.


@ APPAVI THANGAMANI

"டீ - டீச்சர்" - யாராவது நமக்கு பேர் வச்சி கலாய்க்க இடமே குடுக்க கூடாது, நாமே அதையும் செஞ்சிடனும்....எப்புடி.....?

யாரும் என்னை தொடர் பதிவுக்கு கூப்பிடலை, எனக்கு மட்டும் கோபம் வராதா!? அதான் நானே ஒரு தொடர் பதிவை தொடங்கி அதற்க்கு எல்லோரையும் கூப்பிடுட்டேன்.

நான் serial killer இல்ல இல்ல serial writer ஆக முயற்சி பண்ணிகிட்டிருக்கேன்.

எனக்கும் முத்தம்மாவை தான் ரொம்ப பிடிக்கும்.

கோவை நேரம் சொன்னது…

இப்போ கடை நிலை ஊழியர்கள் அப்புறம் உயர் நிலையா....அருமை

சுசி சொன்னது…

நன்றி கோவை நேரம்.

தக்குடு சொன்னது…

அக்கா, முதல்ல உங்களோட பாராட்டுக்கு நன்னிஹை! இந்த பிரிவுல எழுதர்துக்கு நிறையா விஷயம் மனசுல இருக்கு, ஆனா கொஞ்சம் அவகாசம் தாங்கோ! அப்புறம் டீ டீச்சர் இல்லை டீ மாமி!தான் நன்னா இருக்கு :))

சுசி சொன்னது…

நன்றி தக்குடு, இந்த தலைப்பில் உங்களிடம் நிறைய விஷயம் இருக்கும் என்று தோன்றியதால் தான் உங்களையும் இந்த தொடர் பதிவில் அழைத்தேன். நிறைய சுவாரசியமான சம்பவங்களுடன் உங்கள் பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

தக்குடு சொன்னது…

Hellooooo, orediyaa 'Ungal/neengal' nu bayangara respect yellam kudukka vendaam. 'oyyyi thakkudu!'nu urimaiyaa unga thambi maathiri kupdungo akka! :))

சுசி சொன்னது…

அப்படியே தக்குடு,

RAMA RAVI (RAMVI) சொன்னது…

தா.தலைவி.உங்க இந்த தொடர்பதிவை தொடர்ந்து எழுதி வெளியிட்டுவிட்டேன். நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.

ஹுஸைனம்மா சொன்னது…

ராம்வி பதிவு வழியாக இங்கு வந்தேன். சுவாரசியம்.

தொடர்பதிவில், பிரகாஷ்தான் மனதைப் பாதிக்கீறார்.

சுசி சொன்னது…

@ ராம்வி : நன்றி ரமாஜி. இதோ வந்து விட்டேன்.

@ ஹுசைனம்மா : ரொம்ப நன்றி ஹுசைனம்மா, வருகைக்கும் கருத்துக்கும்.

குறையொன்றுமில்லை. சொன்னது…

நீங்க சென்னையா? நான் வரேனே.

(Mis)Chief Editor சொன்னது…

உங்க தளத்துக்கு இப்பதான் வரேன்...
ரொம்ப நன்னா இருக்கே...!

உங்களுக்கு டயமே இல்லாதப்ப இதை படிங்க...
http://apdipodu.blogspot.com/2011/09/18.html

-பருப்பு ஆசிரியன்

அம்பாளடியாள் சொன்னது…

அழகிய தொடர் பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ மிக்க
நன்றி பகிர்வுக்கு .முடிந்தால் வாருங்கள் என் தளத்திற்கு ...

சுசி சொன்னது…

@ chief editor : நன்றி, தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும்.

@ ambaaladiyaal : நன்றி, தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தானைதலைவியின் தரமான பகிர்வுக்கு
தாராளமான பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!

சுசி சொன்னது…

நன்றி ராஜராஜேஸ்வரி தங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும்.