செவ்வாய், செப்டம்பர் 20, 2011

கவர்மென்ட் ஆஸ்பத்திரி

"நீங்கள் கவர்மென்ட் ஹாஸ்பிடலுக்கு வைத்தியம் பார்த்துக்கொள்ள போவீர்களா ? " என்று நான் கேட்டால் உங்களில் எத்தனை பேர் "ஆம், போவேன்!" என்று சொல்லுவீர்கள்? நிச்சயம் பலரும் இல்லை என்று தான் சொல்வீர்கள். இதற்கு என்ன காரணம்?  அரசாங்க சேவை என்றாலே அது தரம் குறைந்ததாக தான் இருக்கும் என்ற எண்ணம் நம் மனதில் பதிந்து விட்டது தான் காரணம்.

அது ஓரளவு உண்மை தான் என்றாலும் முழு உண்மையல்ல. எல்லா இடங்களிலும் தவறுகள் நிகழ்கின்றன. அதே போல் தான் அரசாங்க சேவைகளிலும் நிகழ்கின்றன.

அரசாங்கம் என்பது வேறு யாரோ இல்லை. அது நாம் தான். எனக்கு இந்த விஷயத்தில் நிறைய அனுபவம்கள் உண்டு. சாதாரண காய்ச்சலுக்காக என்று தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் கூட உங்களுக்கு ECG, CT Scan,MRI Scan எல்லாம் எடுத்து விடுவார்கள். அது மட்டுமல்ல அங்குள்ள மருத்துவர்கள் நல்ல அனுபவம் உள்ளவர்களா என்பதும் நிச்சயம் இல்லை. ஆனால் அரசாங்க மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு பல விதமான நோயாளிகளை  சந்திக்கும் அனுபவம் இருக்கிறது. மேலும், விபத்துக்கள்,இயற்கை சீற்றங்கள் போன்ற சமயங்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு இருப்பதால் அவர்களால் எல்லாவிதமான நோயாளிகளையும் எளிதாக கையாளமுடியும். scan centre, lab போன்றவற்றோடு  link வைத்துகொண்டு கமிஷன் வாங்க மாட்டார்கள்.

"ஆனால், சுத்தமாக இருக்காதே !" என்கிறீர்களா ? ஆம் சுத்தமாக இருக்காதுதான் ஆனால் அப்படி இருப்பதற்கு யார் காரணம்? நாம் தான். நம்மை போன்ற நோயாளிகள் தான். பாமரர்கள் மட்டுமே செல்ல கூடிய இடமாக அரசு மருத்துவமனைகள் இருப்பதால் தான் இந்த நிலை. நம்மை போன்ற படித்தவர்கள் அடிக்கடி அரசாங்க மருத்துவமனைகளுக்கு செல்ல ஆரம்பித்தால் "ஐயோ! படிச்சவங்க வர இடம், எதாவது சரியாய் இல்லன்னா கேஸ் போட்டுடுவாங்க." என்கிற பயம் ஊழியர்களுக்கும் இருக்கும். அதன் பலன் வசதி இன்மையால் அங்குவரும் பாமர ஏழை நோயாளிகளுக்கும் கிடைக்கும். படிக்காத நோயாளிகளையும் அங்கு சந்திக்கும் போது சுகாதாரத்தை அவர்களுக்கு போதிக்கலாம். 

இப்போதெல்லாம் மருத்துவமனைகளிலும் லப்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. வியாதிகள் அதிகமாகிவிட்டது தான் அதற்கு காரணம் என்று நாம் நினைக்கிறோம். அது ஓரளவு சரியே என்றாலும் சாதரணமாக தொட்டுப்பார்த்தே வைத்தியம் செய்ய கூடிய சிறிய நோய்களுக்கும் ஸ்கேன், எக்ஸ்ரே என்று அலைகழிப்பதும், காரணமின்றி அட்மிட் செய்வதுமான தனியாரின்  போக்கும் ஒரு காரணம் என்றே நினைக்கிறேன். இப்போதெல்லாம்  டிவியில் தனியார் மருத்துவமனைகள் போட்டி போட்டுகொண்டு விளம்பரம் செய்கின்றன. 

இந்நிலையில், அரசாங்க மருத்துவ மனைகளை நாடுவதே நல்லது. நம் வரி பணத்தினால் செயல் படும் அரசாங்க மருத்துவ சேவைகளை பெறுவது நம் உரிமை மட்டுமல்ல, நம் கடமையும் கூட. 

5 கருத்துகள்:

அப்பாவி தங்கமணி சொன்னது…

நாங்க இருக்கிற ஊர்ல பிரைவேட் ஹாஸ்பிடல்ஸ் இல்லவே இல்லை... ஹெல்த் கேர் பிரைவேட் கைல குடுத்தா சேவை மனப்பான்மை போய் காசு பாக்கற எண்ணம் வந்துடும்னு எல்லாமும் இன்னும் கவர்ன்மென்ட் கைலையே வெச்சு இருக்காங்க. கொஞ்சம் waiting டைம் அதிகமே தவிர கேர் ஒகேவாதான் இருக்கு. நம்ம ஊர்லையே அப்படியே இருந்துருக்கலாமோனு சில நேரம் தோணுது... பாப்போம்

RAMVI சொன்னது…

நீங்க சொல்லியிருப்பது முற்றிலும் சரி தா.தலைவி.இது பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் அவசியம் தேவை.

Thanai thalaivi சொன்னது…

@ தங்கமணி : நன்றி தங்கமணி ! நீங்கள் சொல்வது போல் ஹெல்த் சேர்விசஸ் அரசாங்கத்திடம் இருப்பது தான் நல்லது. பாருங்க போனவாரம் காஞ்சிபுரத்துல மட்டும் பதினேழு போலி டாக்டருங்கள புடிச்சிருக்காங்க.இதுக்கு தான் அரசாங்க ஹாஸ்பிடலுக்கு போகணும்னு சொல்லறது.

@ ரமாஜி : நன்றி ரமாஜி, ஊதுற சங்கை ஊதி வைத்துவிட்டேன். ஏதோ நல்லது நடந்தா சரி.

கவிநயா சொன்னது…

சிந்தித்துப் பின்பற்ற வேண்டிய கருத்து. நன்றி தலைவி!

Thanai thalaivi சொன்னது…

nandri kavinaya !