செவ்வாய், செப்டம்பர் 20, 2011

சர்வம் சக்திமயம் பாரு!கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்துமதம்" நூலில் படித்தது இது.

பிரம்ம தேவரிடம் போய் ஒருவர் கேட்டாராம், "சிவன் பாதி, சக்தி பாதி சேர்ந்து அர்த்தநாரீஸ்வர வடிவமாகியது சரிதான். ஆனால் சிவனின் மறுபாதியும் சக்தியின் மறுபாதியும் எங்கே போயின..?"

பிரம்ம தேவர் சொன்னாராம், "சிவனின் மறுபாதியும் சக்தியின் மறுபாதியும் தான் இந்த உலகில் ஆண்களாகவும் பெண்களாகவும், பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்." 

நான் படித்த அறிவியல் பத்தாம் வகுப்பு வரைதான். ஆனால் அதில் நான் படித்தது "energy neither can be created nor be destroyed. one form of energy will transform into another form." என்பது தான். அதாவது சக்தி ஆக்கமும் அழிவும் இல்லாதது என்பதே.(தற்போதைய அறிவியலில் இந்த நிலைபாட்டிலிருந்து ஏதேனும் மாற்றம் உண்டா என்பது தெரியவில்லை.) சக்தியும் சிவமும் சேர்ந்ததே உலகம். அதாவது, சக்தி மோனநிலையில் இருக்கும் போது சிவமாகவும், செயல் வடிவமாகும் போது சக்தியாகவும் தோன்றுகின்றன. ஆனால் அவற்றில் பேதமில்லை.

ஒரு கணித பேராசிரியரை சந்தித்தேன். அவர் கணினியில் ஏன் பைனரி உபயோகபடுத்த படுகிறது என்பதற்கு நல்ல விளக்கம் கொடுத்தார். இந்த உலகில் எல்லாமே இரண்டு நிலைகளை கொண்டுள்ளன. இரவு-பகல், ஆன்-ஆப், ஆண்-பெண் பாசிடிவ்-நெகடிவ் போன்றவையே இதற்கு உதாரணங்கள் என்றார்.அப்படியே கணினியிலும் 0,1  உபயோகபடுத்தபடுகிறது என்றார்.

உடலும் உயிரும் தனி தனியே இயங்க முடியாது. "சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்..." என்று அபிராம பட்டர் அன்னையை துதிக்கிறார். சொல்லும் பொருளும் பிரிக்கமுடியாதவை.

எல்லா உயிர்களிடத்தும் இருக்கும் ஆத்மா ஒன்றே. எல்லா உயிர்களையும் ஞானி சமமாக காண்பான், என்கிறது கீதை. எல்லா உயிர்களையும் சமமாக பார்க்கும் (அதாவது இறைவடிவமாக) காணும் பக்குவம் நமக்கு வரவேண்டும் என்பதற்காக ஏற்பட்டதே நவராத்திரி கொலு.

நம்மால் எல்லா உயிர்களையும் சமமாக பார்க்க முடியாவிட்டாலும் சரிபாதியான பெண்களை மட்டுமாவது தன்னை போன்ற மனித ஜீவன் என்ற எண்ணத்தோடு பார்க்கவேண்டாமா?

தாவர வகைகள், விலங்கினங்கள் யாவற்றிலும் ஆணும் பெண்ணும் உண்டு. ஆனால், இன்றும் படித்தவர்களும் ஆண் குழந்தை தான் உயர்ந்தது என்று பெண்  குழந்தை பிறக்ககூடதேன்றும் வேண்டுதல்கள் செய்து கொள்வதும், நவீன மருத்துவ முறைகளை நாடுவதும் அதிகமாகவே இருக்கிறது.  

வெறும் ஆண்கள் மட்டும் இருந்தால் உலகம் அழகாக இருக்காது. வெறும் பெண் மட்டும் இருந்தால் உலகம் வீரியத்தோடு இருக்காது. இந்த நவராத்திரியில் அம்பிகையை  வழிபடுவதோடு நம் மனதில் இருக்கும் இந்த வேறுபாட்டையும் களைந்தேரிவோமாக.

இந்த கருத்தை பெரியவர்கள் சிறியவர்கள்,படித்தவர்கள், படிக்காதவர்கள், மகான்கள், மாமேதைகள், அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள்  எல்லோரும் சொல்லிவிட்டார்கள். எனவே, நவராத்திரி சிறப்பு பதிவாக நானும் சொல்லிவிட்டேன். அடுத்து இனி பிறக்கும் குழந்தையும் கூட சொல்லும். ஆனாலும் அவரவர் தானாக மாறவில்லையானால் ஒன்றும் பயனில்லை.

"ஒ மென்று உரைத்தனர் தேவர் - ஓம் 
ஒ மென்று சொல்லி உறுமிற்று வானம்."

  "........................................."

"நாமுங் கதையை முடித்தோம்-இந்த 
நானில முற்றும் நல் லின்பத்தில் வாழ்க!" 

                                                      ----மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

பின் குறிப்பு : குழந்தைகளுக்கு நவராத்திரி விடுமுறை கிடையாது, ஆனால் நான் நவராத்திரிக்கு லீவ். இன்னமும் இரண்டு வாரங்கள் ஆகும், நான் மீண்டும் எழுத. அதுவரைக்கும் என் ஆருயிர் ரசிகர்களாகிய நீங்கள் வருத்த படகூடாதே என்றுதான் இரண்டு பதிவுகளாக போட்டு விட்டேன்.படித்துக்கொண்டும் கமெண்ட் போட்டுக்கொண்டும் சமர்த்தாக இருக்கவும்.ஹா..ஹா...ஹா. ச்சும்மா ....  

5 கருத்துகள்:

அப்பாவி தங்கமணி சொன்னது…

அழகான கேட்டிராத விளக்கம்... நல்லா யாருக்கும் புரியற மாதிரி விளக்கி இருக்கீங்க... சூப்பர்... என்னது லீவா? அப்போ சுண்டல் விநியோகம் எல்லாம் இல்லியா? ஹ்ம்ம்... ஆசையா வந்து பூசை வாங்கினேன் போங்க..:)

Lakshmi சொன்னது…

ஆஹா அருமையான நவராத்திரி பதிவு. நல்ல விஷயங்கள் தெளிவா சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு.

கவிநயா சொன்னது…

நல்ல கருத்துகள். நவராத்திரி வாழ்த்துகள்! :)

RAMVI சொன்னது…

மிக நல்ல கருத்து தலைவி.அருமையான விளக்கம்.

Thanai thalaivi சொன்னது…

@ தங்கமணி : நன்றி தங்கமணி !

@ லக்ஷ்மி அம்மா : நன்றி லக்ஷ்மி அம்மா !

@ கவிநயா : நன்றி கவிநயா !

@ ரமாஜி : நன்றி ரமாஜி