செவ்வாய், மே 31, 2011

கதை எழுதிய கதை

எனக்கும் கதை எழுத ஆசை வந்தது. ஆனால் எதை பற்றி கதை எழுதுவது என்ற குழப்பமும் கூடவே வந்தது. ஹாச்ய கதை எழுதலாமா? அதனால் வாசகர்களுக்கு என்ன பயன்? சோக கதை எழுதினால் மட்டும் என்ன பயன் கிடைத்துவிட போகிறது?


எதை பற்றி கதை எழுதுவது? காலையில் கணவருடன் போட்ட சண்டையை பற்றி எழுதி இந்த கணவன்மார்களே இப்படித்தான் என்று கருத்து சொல்லலாமா? வேலைக்காரி வந்து சொல்லும் வம்பு கதைகளை கண், காது, மூக்கு வைத்து விரிவு படுத்தலாமா? குழந்தைகளுக்கான குட்டி கதை எழுதலாமா? இல்லை பாட்டிகளுக்கான பக்தி கதை எழுதலாமா? சமூக கதை எழுதலாமா? எனக்கு சரித்திர கதை எழுத வருமா?

இளைனர்களுக்கு பிடித்த காதல் கதை எழுதலாமா? எல்லோருக்கும் பிடித்த உண்மை கதை எழுதலாமா? 

சிறுகதை எழுத ஆரம்பித்து அது தொடர் கதையாய் நீண்டு விட்டால் என்ன செய்வது?

நான் கதை எழுத யோசித்ததையே ஒரு கதையாய் எழுதி படித்து பார்த்தேன். இதில் கதை என்ற வார்த்தை எத்தனை முறை வந்துள்ளது என்று வாசகர்களுக்கு ஒரு போட்டி வைக்கலாம் என்று தோன்றியது. 

என்ன எண்ணி விட்டீர்களா? எத்தனை முறை வந்துள்ளது?

என்னது பரிசா!? அது......வந்து....நான் escape !