வியாழன், டிசம்பர் 11, 2014

முதல் பரிசு

தமிழ்குடில் அறக்கட்டளை நடத்திய “பெண்களுக்கான சிறப்பு கட்டுரைப்போட்டி”யில் முதல் பரிசு பெற்ற என் கட்டுரை.இது முதல் பரிசு மட்டுமல்ல நான் முதன்முதலாக பெறும் பரிசும் கூட.

நான் படைக்க விரும்பும் சமூகம்.


புதன், ஆகஸ்ட் 27, 2014

சன் ஸ்க்ரீன் லோஷன்


”என் கையெல்லாம் கருப்பா, சுருக்கம் சுருக்கமா இருக்கு பாரேன் உஷா, இதுக்கு என்ன பண்ணலாம்?”

வாயில் நூலை கவ்வியபடி என் புருவத்தை ராவிக்கொண்டிருந்த உஷா ஒரு கணம் அதை நிறுத்திவிட்டு என் கைகளை உற்று பார்த்தாள்.

“ம்…ம்..சன் டான்ஸ். வெளியில போகும் போது எதாவது சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டுக்கோ.”

”நான் தான் வெளியிலயே போறதில்லையே. மிஞ்சி போனா மாடிக்கு துணி உலர்த்த போவேன் அவ்வளவுதான்.”

“அதுவே போதும் சன் டான்ஸ் வர்றத்துக்கு. சன் ஸ்க்ரீன் போட்டுக்கோ.”

“ஆனா மூஞ்சியும் தானே வெயில்ல காயறது. அது கருப்பா ஆகவேயில்லீயே?”

காசியில் வேண்டாத கஸ்டமரையும் விட்டுவிடலாம் என்று ஒரு விதியிருந்திருந்தால் உஷா ஐந்து வருடங்களுக்கு முன்பே என்னை காசியில் தத்தம் கொடுத்திருப்பாள். அவளை பொறுத்தவரையில் நான் ரெகுலர் கஸ்டமர் இல்லை, ரெகுலர் கஷ்டமர்.

“சன் ஸ்க்ரீன் போட்டுக்கோ, அவ்வளவு தான்.” என்றாள் அழுத்தமாக.
--------------------------------------------------------------------------------------

”ஏண்டீ ப்ரியா ! என் கையெல்லாம் கருப்பா, சுருக்கம் சுருக்கமா இருக்கே, உஷா எதாவது சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டுக்க சொல்றா, என்ன போட்டுக்கலாம்?”

”அட ஆமாக்கா ! கருப்பா, சுருக்கமாத்தான் இருக்கு. இதெல்லாம் வயசானாதானே வரும்” என்றவள் நான் முறைப்பதை பார்த்துவிட்டு “அதான் உங்களுக்கு எப்படின்னு தான் யோசிக்கிறேன். நான் ரெகுலரா வாங்கற கடையிலயே ஹெர்பல் ப்ராடெக்ட்ஸ் இருக்கு. வாங்கி தரேன்.”
---------------------------------------------------------------------------------------------

”ஒரு பாட்டில் 250 ரூபாயா? ரொம்ப வேஸ்ட் ப்ரியா. இவ இதையெல்லாம் கேப்பாளே தவிர நாலு நாள் கூட யூஸ் பண்ணமாட்டா. இது அட்டர் வேஸ்ட்.”

“அதொன்னும் வேஸ்டில்ல அத்திம்பேர், இது ஹெர்பல் தான் மூணு வருஷம் ஷெல்ப் லைப் இருக்கு.”

”என்னவோ போ ! மூணு வருஷம் இல்ல முப்பது வருஷம் ஆனாலும் இது அப்படியே தான் இருக்கும்.”

“வாயவச்சுண்டு சும்மாவே இருக்க முடியாதா உங்களால, எத ஆரம்பிச்சாலும், அது நடக்காது, உருப்படாதுன்னு தொஸ்கு சொல்லிண்டு.”
---------------------------------------------------------------------------------------------

இது நடந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில், போன வாரம் ப்ரியா வந்திருந்த போது ஷெல்பை குடைந்தவள்,”அக்கா இந்த சன் ஸ்க்ரீன் லோஷனை யூஸ் பண்ணலையாக்கா? “

“நான் எங்கடீ வெளியில போறேன் இதை போட்டுக்க? அதோட கொஞ்சம் சூரிய வெளிச்சம் மேலபடறது தான் நல்லதாமே!!”

“இதையெல்லாம் இப்ப யோசிக்கிறவ எதுக்கு இதை வாங்கணும். நான் அப்பவே சொன்னேன். கேட்டாத்தானே.”

“எல்லாம் நான் யூஸ் பண்ணுவேன். நீங்க பேசாம இருங்கோ.”

”அக்கா ! நீங்க தான் இப்போ ஆபீஸ் போறீங்கல்ல, போட்டுக்கலாமே?”

“அது காலங்கார்த்தால வெயில் வர்றத்துக்குள்ளயே ஆபீஸ் போயிடறோம், அங்க உள்ளயே தானே இருக்கோம். அப்புறம் வெயில் போனவிட்டு தானே வீட்டுக்கு வர்றோம். அதோட எனக்கு மறந்து போயிடறது ப்ரியா.”

பவர் ஸ்டார் மாதிரி மண்டையை ஆட்டி “ம்…ம்… மறந்து போயிடறதுங்கறது தான் நிஜம். மத்ததெல்லாம் சாக்கு.”

“ஆமா, சாக்கு, கோணின்னுண்டு, பேசாம இருங்கோ. நான் நாளையில இருந்து போட்டுக்கறேன் ப்ரியா.”

இன்று காலை மறக்காமல் சன் ஸ்க்ரீன் லோஷனை எடுத்து போட்டுக்கொண்ட போது, “எந்த காலேஜ் படிக்கிறீங்க?”

“காலேஜா???, நானா!!!!”

”மம்,..,மீ” சிந்து வந்து காலை கட்டிக்கொள்ள, கேட்டவர்கள் வாய்பிளந்து பார்த்தார்கள். கற்பனையே அழகாக இருந்தது.

செருப்பை மாட்டி வெளியில் வந்த போது, ரெண்டு மூன்று மழை துளிகள் என் மேல்பட்டு தெறித்தன. அன்னாந்து பார்த்தேன். என்ன கொடுமை இது? இன்றைக்கென்று பார்த்து சன்னே மேக ஸ்க்ரீனுக்குள்.

செவ்வாய், ஜூன் 24, 2014

தியேட்டர் எஃபெக்ட்ஸ் பார்ட் – II

கல்யாணம் நிச்சயமாகி இருந்த போது, என் அக்கா (பெரியப்பா பெண்) “சினேகிதியே படம் போகணும் துணைக்கு வரியாடீ?”ன்னு கேட்டா, இந்த விஷயத்துல எல்லாம் யாருக்கும் நான் இல்லன்னே சொல்லமாட்டேன். சரின்னுட்டேன். அக்கா சொன்னா, “நான் டிக்கெட் வாங்கிண்டு உதயம் தியேட்டர்ல வெயிட் பண்ணறேன், நீ வந்துடு.” நானும் சரின்னுட்டேன். இப்போ ஆபீஸ்ல என்ன பொய் சொல்லறது? 

ஒரு ஐடியா வந்துது. எங்க பாஸ் கிட்ட் போயி, ”மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏதோ கல்யாண விஷயமா பேச வராங்களாம் அப்படியே என்னையும் பார்க்கணும்ன்னு பிரியப்படறாங்களாம்”,ன்னு ஒரு டூப் உட்டுட்டு கிளம்பி படத்துக்கு போயிட்டேன். என் போறாத நேரம் அப்போதைய என் காதலர், அதான் எங்க தலைவர் ஆபீஸுக்கு என்ன தேடிண்டு போயி நின்னிருக்கார்

எங்க பாஸ் வெள்ளந்தியா,”உங்க அம்மா,அக்கால்லாம் வீட்டுக்கு வராங்கன்னு மேடம் அப்பவே கிளம்பிட்டாங்களேன்னு சொல்ல தலைவருக்கு செம பல்பு.

கல்யாணத்துக்கப்புறம் கைதியாகி வீட்டு சிறையிலேயே கொஞ்ச வருஷம் போனதுக்கப்புறம் நான் ரொம்ப கெஞ்சி கேட்டு, யாருக்கும் தெரியாம ரொம்ப ப்ளான் பண்ணி, ஒருவெட்டிங் டேக்குசண்டை கோழிபடத்துக்கு போக டிக்கெட் வாங்கினோம். அதுவும் அந்த படத்துல வர, ”தாவணி போட்ட தீபாவளி…” பாட்டு அப்போ குட்டிபாப்பாவா இருந்த என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் அதனால தான் அந்த படத்துக்கு கூட்டிட்டு போகவே தலைவர் சம்மதிச்சார்.

இந்த விஷயத்தை நான் பெருமையா என் பொறந்த வீட்டுல சொல்ல அவ்வளவு தான். நாங்க பைக்ல தியேட்டருக்கு கிளம்பினதுலர்ந்து ஒவ்வொரு பத்தடிக்கும் யாராவது ஒருத்தர் என் அம்மா, மாமா, அத்தை, அக்கா இப்படி ஒவ்வொருத்தரா போன் பண்ண ஆரம்பிச்சாங்க.


மாப்பிள்ளை கல்யாண நாள் வாழ்த்துகள்!”

இவர் உடனே, “ஹிஹிநன்றி!”

அடுத்தது அந்த பக்கத்திலிருந்து,”சினிமாவுக்கு போறீங்களாமே? வாழ்த்துகள்!”

இவர் “!?!?!?”

என் அக்கா ஒருபடி மேலே போய்,”என்ன படம் மாப்பிள்ளை போறீங்க?”

இருந்த கடுப்புல தலைவர் பல்லை கடித்தபடி,”ம்..ம்..சண்டை கோழி. உங்க தங்கச்சிக்கு பொருத்தமான படம்.”

கடுப்பான தலைவர் என்னிடம் சொன்னது,”போற போக்கை பார்த்தா, தியேட்டர்ல விஷாலுக்குக்கூட கட் அவுட் வச்சிருக்காங்களோ இல்லையோமுதல் முதலாக திரைப்படம் பார்க்கவரும் எங்கள் குலவிளக்கே!”ன்னு போட்டு உங்க வீட்டு ஆளுங்க உனக்கு கட் அவுட் வச்சிடுவாங்க போலிருக்கே.”

அந்த படத்தை பார்க்கவிடாமல் என் பொண் அழுததும், சரியாக அந்த பாட்டு வரும் போது தூங்கி போனதும் இங்கே பதிவு செய்தே ஆகவேண்டிய தகவல்கள்.

அதன் பின் பல வருடங்கள் தியேட்டர் பக்கமே போகாமல் இருந்து பயணம்படம் வந்த போது, ராதா மோகன், நாகார்ஜுனா, ப்ரகாஷ்ராஜ் என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்போடு போனோம். படத்தில் சீரியஸ் காட்சிகள் வரும்போதெல்லாம் எல்லாம் மக்கள் சிரித்தார்கள்.வெறுத்துவிட்டோம்.


அதோடு, தியேட்டர்களில் திரைப்படம் ஆரம்பிக்கும் முன் புகை பழக்கத்தின் கேடுகளை விளக்கும் டாக்குமெண்டரி ஒன்று போடுவார்களே? “என் பெயர்….” என்று, அந்த படத்தில் நாளை நாம் வரக்கூடாதென்றால் தியேட்டரில் சினிமா பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். அவ்வளவு சிகேரட் நெடி. எதாவது ஒரு சானலில்,”உலக தொலைக்காட்சிகளில் முதல்முறையாக….” என்று போடுவதையே பார்த்துக்கொள்ளலாம். அதுவும் இல்லையென்றால், சினிமா பார்க்கவில்லை என்றாலும் ஒன்றும் குடி முழுகிவிடாது.

தியேட்டர் எஃபெக்ட்ஸ் - பார்ட் Iநான் சின்ன குழந்தையா இருக்கிறச்சே என்னை தூக்கிண்டுஅவர்கள்சினிமாவுக்கு போனாங்களாம் எங்க அம்மா, அப்பா. அங்க ஸ்கிரீன்ல வந்தமேரி பிஸ்கெட்அட்வர்டைஸ்மெண்ட பார்த்து,”ஹை ! பிச்சி ! பிச்சி !” ந்னு (பக்கி மாதிரி) கத்தினேனாம். இது தான் என் முதல் தியேட்டர் அனுபவம் பற்றிய பதிவு.

அப்புறம்வறுமையின் நிறம் சிவப்புபார்க்க போயி என் தம்பியும், கசினும் தொலைஞ்சு போயி கிடைச்சது. “துடிக்கும் கரங்கள்பார்க்க போயி என் சின்ன தம்பி விடாம அழுததால பாதியிலேயே திரும்பி வந்தது. இதெல்லாம் நிழலா நியாபகம் இருக்கிற விஷயங்கள்.

முதல் முதலா வந்த 3டி படமானமை டியர் குட்டிச்சாத்தான்பார்க்கறச்சே அந்த கண்ணாடிய கீழ குனிஞ்சு போட்டுண்டுட்டு நிமிரவும். படத்துல மந்திரவாதி ஏதோ ஒரு நெருப்பு சக்கிரம் மாதிரி ஒன்னுத்த விடவும் சரியா இருந்துது. நெருப்பு சக்கிரம் மூஞ்சிகிட்ட வர பயந்து வீல்!”ன்னு கத்தினது இன்னமும் நன்னா ஞாபகம் இருக்கு.

அப்புறம் கமலா தியேட்டர்லதர்ம துரைபடம் பார்க்க நானும், தம்பிகளும், மாமா பசங்களும் போயிட்டு, டிக்கெட் குடுக்க ஆரம்பிக்கறச்சே பணம் போறாதுன்னு தெரிஞ்சு போயி என் மாமா பையன் வீட்டுக்கு பஸ்புடிச்சு போயி பணம் எடுத்துட்டு வந்து டிக்கெட் வாங்கினது. பின்ன, ரஜினி படமாச்சே டிக்கெட் கிடைக்குமா?

ஒன்பதாம் கிளாஸ் படிக்கிறச்சே, கூடபடிக்கிற கிராமத்துலர்ந்து வந்த பொண்ணு அவங்க அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட்ன்னும் அவர் சினிமா பார்க்க விடமாட்டார்ன்னு சொல்லி எப்படியாவது ஒரு சினிமாவுக்கு கூட்டிகிட்டு போகும்படியா கெஞ்சினா. நாம தான் ஊருக்கு உபகாரியாச்சே. எங்க அப்பா கிட்ட சொல்லி பாவம்ன்னு சினிமாவுக்கு அவள கூட்டிண்டு போக பர்மிஷன் வாங்கினேன். குறிப்பிட்ட அந்த நாள் என்னமோ எங்க ஸ்கூலுக்கு மட்டும் லீவா போன ஒரு ஒர்கிங் டே. பார்த்தா காலங்கார்த்தால எட்டு மணிக்கெல்லாம் எங்க வீட்டுக்கு வந்து நிக்கறா. ராத்திரியெல்லாம் எக்ஸைட்மெட்ல தூங்கியே இருக்க மாட்டா போலிருக்கு


ஏய் ! எங்க அப்பாகிட்ட உங்க அப்பா எனக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கிட்டதால நான் போயிதான் ஆகணும்ன்னு சொல்லிட்டு வந்திருக்கேம்மா. ப்ளீஸ்ப்பா ! சீக்கிரம் போலாம்ப்பா !” என்று கெஞ்சினாள் 
.
சரின்னு கிளம்பினோம். எந்த தியேட்டர்ல காலங்கார்த்தால படம் போடுவாங்க. நான் கொஞ்சம் லேட்டா போகலாம்ன்னு சொன்னாலும் அந்த பொண்ணு கேக்கல. ஒவ்வொரு தியேட்டரா போய் கேவலமாஎப்ப படம் போடுவீங்க?”ன்னு  கேட்டுண்டே போனோம். எனக்கா மகா எரிச்சல். ஆனா, பாவம் அவளுக்கு ஆசை வெட்கம் அறியவில்லை. எதாவது ஒரு படம் பார்த்தே ஆகணும்ன்னு ஒரே அடம். கடைசில, இப்போபத்மராம் கல்யாண மண்டபமாஇருக்கிறராம்தியேட்டர்ல ஒரு ராமராஜன், கௌவுதமி நடிச்ச படம் பார்த்தோம். அதுக்கு தியேட்டர் வாசல்லயே திறக்கரவரைக்கும் காத்திண்டிருந்து முதல் ஆளா டிக்கெட் வாங்கினோம். அந்த தியேட்டர் வாச்மேன் எங்களை ஒரு மாதிரியா பார்த்தான்.

கிரோம்பேட்டையில இருக்கிறச்சே என் மாமா பசங்க வந்தா ஒரு சினிமா கட்டாயம் பார்ப்போம். அப்படி ஒரு தடவை ஒரு அம்பது ரூபாய் நோட்டை எடுத்துண்டு வெற்றி தியேட்டருக்கு போனோம். (அப்போல்லாம் அந்த அம்பது ரூபாய்ல நாங்க அஞ்சு பேரும் படம் பார்க்கலாம்). என் தம்பிகிட்ட தான் பணம் இருந்துது. “போயி டிக்கெட் வாங்குடா!”ன்னாபணத்த காணோம்ங்கிறான். “ஏய் ! சும்மா விளையாடாதடா!”ன்னேன். “இல்லக்கா! நிஜம்மாவே காணோம்!” கொஞ்ச நேர விசாரிப்புகளுக்கு பின் நிஜமாவே பணம் தொலைஞ்சு போச்சுங்கர விவரம் எனக்கு புரிஞ்சிடுத்து. எங்களுக்குள்ள நடக்குற இந்த கான்வர்ஷேஷன்ஸ ஒருத்தன் பார்த்துண்டே இருந்தான். இதை பார்த்தவுடனே அவன் தான் திருடன்னு நாங்க முடிவு பண்ணிட்டோம்.

நேரா பக்கத்துல இருக்கிற கிரோம்பேட் போலீஸ் ஸ்டேஷன் போனோம்.அங்க எங்களோட அம்பது ரூபா காணாம போயிடுத்துன்னு கம்ப்ளைண்ட் பண்ணினோம்.அங்க இருந்த போலீஸ்காரர்,”எங்க வுட்டீங்க பசங்களா? நல்லா தேடிபாருங்கன்னாரு. நாங்க உடனேசார் ! ஒருத்தன் எங்களையே உத்து பார்த்துகிட்டு இருந்தான். அவன் தான் திருடியிருக்கணும். அவன் எங்க கிட்டயிருந்து திருடின பணத்துல படம் பார்க்கிறத்துக்காக தியேட்டர்லயே காத்துகிட்டிருக்கான். வந்து உடனே அரஸ்ட் பண்ணுங்க சார்!”ன்னோமே பார்க்கணும்

சுத்தி இருந்த மத்த போலீஸ்காரங்கள்ளாம் சிரிச்சாலும் அந்த பெரிய போலீஸ் மட்டும்அம்பது ரூபாய்க்க்கல்லாம் அரஸ்ட் பண்ண முடியாது பசங்களா.”ன்னு ஏதோ சமாதானமெல்லாம் சொல்லி திருப்பி அனுப்பிட்டார். வீட்டுக்கு வந்தா, “சினிமா பார்க்க குடுத்த பணத்த தொலைச்சிட்டா வேற பணமெல்லாம் இல்ல. வெறும்ன்ன மோட்டுவளைய பார்த்துண்டு ஒக்காந்துண்டு இருங்கோ.”ன்னு அம்மா திட்டிட்டா. வெறும்ன்ன மோட்டுவளைய பார்த்துண்டு ஒக்காந்துண்டு இருக்கிறத்துக்கா சம்மர் லீவு விட்டிருக்கு? நாங்க வழக்கம் போல வீட்ட சுத்தி ஓடி மாடி, சுவர், மரம் எல்லாம் ஏறிகுதிச்சு எங்களால முடிஞ்ச அளவுக்கு அக்கம்பக்கத்துல இருக்கற வயசானவாளையெல்லாம் மத்தியானத்துல தூங்கவிடாம நன்னா படுத்தி நாங்க படம் பார்க்க முடியாம போன ஆத்திரத்தை தீர்த்துண்டோம்.

தியேட்டர் எஃபெக்ட்ஸ் தொடரும்……

வியாழன், ஜனவரி 09, 2014

காக்காவான குயில் :(((

காட்சி 1:
 
இடம் : எங்க வீடு.
காலம் : நேற்று காலை ஒன்பது மணி."காற்றுக்கென்ன வேலி......"

"மீரா!"

"கடலுக்கென்ன மூடி.... டிட்ன்க்டிடிங்....."

"மீரா"

"கங்கை வெள்ளம் சங்குக்குளே அடங்கி விடாது, மங்கை நெஞ்சம் பொங்கும் போது..."

"மங்கை நெஞ்சம் பொங்கறது இருக்கட்டும், பால் பொங்கிட போறது கவனி!"

"தெரியும்ப்பா, அடங்க மாட்டீங்க நீங்க? கொஞ்சமாவது பீல் பண்ணி பாட விடறீங்களா...!"

"ஸா..நி...ஸா..ஸரி
ஸரிஸரிஸரிஸாநி...."

"தண்ணி கேன்காரர் வந்தா பணம் குடுத்திடு!"

"ஸா..நி...ஸா..
ஸரிஸரிஸரி....சரிப்பா"

"மீரா"

"ஸ்ஸ்ஸ்....என்னப்பா வேணும் உங்களுக்கு?"

"இல்லப்பா நீ ஜலதோஷத்துலையும், ஜுரத்துலையும் கஷ்ட்டப்படரன்னு எங்க ஆபீஸ்ல டிரைவர்ரா இருக்கானே, அந்த நார்த் இந்தியன் பையன் அவன்கிட்ட சொன்னேன். அவன்தான் இந்த மருந்தை குடுத்தான். "இத மேடத்துக்கு குடுங்க சார், இன்னிக்கே நிவாரணம் கிடைச்சுடும்"ன்னு சொன்னான். ஆயுர்வேதிக்காம், ஒரு நாளைக்கு மூணு வேளை ஹாட் வாட்டர்ல கலந்து குடிக்கணுமாம்.இந்தா"

"சாரிப்பா!"

"எதுக்கு சாரி?"

"இல்ல எப்பவும் போல நீங்க நச்சரதுக்கு தான் கூப்படறேளோன்னு நினைச்சு, எரிஞ்சு விழுந்துட்டேன்."

"சீ..சீ...பரவாயில்லை, மறக்காம மருந்த சாப்பிடு."
                                                            

காட்சி 2: 
இடம் : எங்க வீடு.
காலம் : நேற்று இரவு ஏழு மணி."மீரா.....மீரா!"

"ஏய் ! அம்மா எங்க ?"

கிச்சனுக்கு வந்து,"உடம்பு எப்படிப்பா இருக்கு? மருந்த சாப்பிட்டியா?"

"அடப்பாவி ! ஏதோ ஒரு மருந்தை குடுத்து குயில் மாதிரி இருந்த என் குரலை காக்கா மாதிரி ஆக்கிட்டேன்களே..!"

கத்தினேன், கதறினேன், என்ன புண்ணியம்? என் குரல் எனக்கே கேட்கவில்லை.

என் நிலையை பார்த்து முகம் முழுக்க பூரித்து, அட! அந்த மருந்தை குடுக்கும் போதே டிரைவர் சொன்னான், "இன்னிக்கி ஒரு நாள் இந்த மருந்தை மேடம் சாப்பிட்டால் போதும் சாப், உங்களுக்கு ஒரு வாரத்திற்கு அவங்க பாட்டுலருந்து நிவாரணம் கிடைக்கும்ன்னு, நிஜம் தான். நாளைக்கு அவனுக்கு சரவண பவன்ல லஞ்ச் ஸ்பொன்சர் பண்ணிட வேண்டியதுதான்."

"கிர்கிர்கிர்கிர்கிர்கிர்கிர்.......!"