செவ்வாய், மே 08, 2012

சித்தி............................!


"மஞ்சுளா மேடம்!, பாப்பா யாரு?"

"என்  பொண்ணு தான் சார்!"

"மஞ்சுளா மேடத்துக்கு இவ்வளவு பெரிய பொண்ணா !?, எங்களுக்கு தெரியவே தெரியாதே !"

(வெட்க சிரிப்புடன்) "அக்கா பொண்ணு சார்!"

"அதானே பார்த்தேன், மேடத்துக்கு ரெண்டும் பையன் தானேன்னு யோச்சிச்சேன்!"

சித்தி  என்னை அவள் அலுவலகத்திற்கு முதன்முதலில் அழைத்து சென்ற போது  நடந்த உரையாடல் தான் மேலே சொல்லப்பட்டது.
 
-------------------------------------------------------------------------------------------------------------

"அம்மா கையை புடிச்சிக்கோ ! அம்மா கையை புடிச்சிக்கோ !" 

சாலையை கடக்கும் போது சித்தி சொல்ல, அம்மா எங்கே என்று சுற்றும் முற்றும் பார்த்து,

ஓ.........! அம்மா என்றது தன்னை தானா! என்று தெளிந்தது இன்று நடந்தது போல் இருக்கிறது.

-------------------------------------------------------------------------------------------------------------

ஒரு சின்ன ஊரே வீட்டில் இருந்தாலும் கோடை விடுமுறையில் என்னையும் தம்பியையும் தன் வீட்டில் இரண்டு நாட்களாவது கொண்டுபோய் வைத்து கொள்ளும் அன்பு. மின்சார ரயிலை முதன் முதலில் நாங்கள் பார்த்தது தாம்பரத்தில் இருக்கும் அவள் ஒண்டி குடித்தன வீட்டிற்கு அழைத்து போகும் போது தான்.
-------------------------------------------------------------------------------------------------------------

""டேய் ! ஹரி அந்த மந்தர கோலை எடேண்டா !" (ரிமோட்)
"ஏய் ! காத்தாடியை சுத்த விடு" (பேன் போடு)
"யானைக்கு யாரு கோமணம் கட்டறது!?" (பூனைக்கு யாரு மணி கட்டறது என்பதன் வேறு வடிவம்)
 "எல்லாம் ஏதாவது உலத்தினால் எலி வாலையாவது  உலத்துமாம். "

சித்தியின்  பிரசித்தமான வசனங்களில் சில இவை.
-------------------------------------------------------------------------------------------------------------

கல்கி, ஆனந்த விகடன் படித்து விட்டு "ஏய் ! இந்த ஜோக்கை  பாரேன்டி." என்று என்னோடு பகிர்ந்து கொள்ளும் தோழமை.

சிறு வயதில் இருந்தே தொந்தரவு கொடுத்து வந்த ருமாடிக் நோயால் ஒரு காலை சாய்த்து சாய்த்து நடப்பதை என் தம்பி "சித்தி, நீ ஒரு லேடி  சனி பகவான்!" என்று கிண்டல் செய்தாலும் அதை புன்னகையோடு ஏற்று மகிழும் குழந்தை மனம்.
-------------------------------------------------------------------------------------------------------------

சித்தப்பாவை பணி நிமித்தம் நெடும் காலம் பிரிந்து இருந்தாலும்,அதனால் பல துன்பங்களை சந்தித்தாலும் அவரிடம் மாறாத காதல்.
  
சரியில்லாத காலோடு தினமும் நாம ராமாயணம் சொல்லி நூற்றி நான்கு நமஸ்காரங்கள் செய்யும் மனஉறுதி.

வாழ்த்த ஐம்பது ஆண்டுகளில் பெரும்பாலும் துன்பத்தையே பெற்றிருந்தாலும், "என்ன பாரு ! எவ்வளவு சௌக்கியமா இருக்கேன். பகவான்  என்னை நன்னா வச்சிருக்கார்!" என்று சொல்லும் நிறைந்த மனது.

-------------------------------------------------------------------------------------------------------------
கேன்சர்  சிகிச்சையால் தலை முடி அத்தனையும் கொட்டி போயிருக்க "இந்த வருஷம் எனக்கு இருப்பதைந்தவது கல்யாண நாள் வருது நான் விக் வச்சிண்டு அதுல நிறைய பூ வச்சிப்பேன்  என்ற உற்சாகம்.

-------------------------------------------------------------------------------------------------------------

சித்தி ! இதெல்லாம் நீ எனக்கு சொல்லாமல் சொல்லி கொடுத்த வாழ்க்கை  பாடங்கள். இப்போதெல்லாம் நான் கல்கி,ஆனந்த விகடன் படிப்பதில்லை.
படித்தாலும்,அவற்றை பகிர்ந்து கொள்ள உன்னை போல் யாருமில்லை.

பலருக்கும் என்னை உன் மகள் என்று தானே தெரியும்.
நீ என்னை நேசித்தது போலவே என் தலைவனையும் நேசித்தாய். 

நான் உன் அன்பிற்கு எதுவுமே செய்யவில்லையே!
நீ என்னிடம் எதுவுமே எதிர்பார்க்கவில்லையே !

சித்தி ! நான் உனக்கு என்ன செய்ய முடியும்? 

----------------------------------------------------------------------------------------------------------------------------

சித்தியின் அறுபதாவது பிறந்த நாள் மே பத்தாம் தேதி (May 10).
அவள் நினைவாகவே இந்த பதிவு.

15 கருத்துகள்:

Under the Mango Tree சொன்னது…

very touching, romba romba athmarthamana varigal

RAMVI சொன்னது…

சித்தியை பற்றிய நினைவுகளை அழகாக சொல்லியிருக்கீங்க தா. தலைவி.

//ஓ.........! அம்மா என்றது தன்னை தானா!//

எவ்வளவு ஆசையாக இருந்திருக்கிறார். உங்களிடம்.

எனக்கும் இதே போல ஒரு சித்தி இருந்தார்,(என் அம்மாவின் தங்கை)அவருக்கும் 2 ஆண் பிள்ளைகள் தான். என்னையும், எந்தங்கையும் தன்னுடைய பெண்கள் என்று சொல்லி மிக ஆசையாக எல்லாம் செய்வார்.1989 ல் என் கல்யாணம் முடிந்த ஒரே மாதத்தில் போய்விட்டார்.(அவருக்கும் கான்ஸர்தான்).

மனோ சாமிநாதன் சொன்னது…

மன உணர்வுகளை மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

Vetrimagal சொன்னது…

அழகாக அன்பை பற்றி , பகிர்ந்து கொண்டதற்றகு நன்றி.
சித்தி என்ற உறவே அருமையானது. நீங்கள் அதிருஷ்டசாலி!

Thanai thalaivi சொன்னது…

@ under the mango tree : நன்றி அக்கா !

@ ராம்வி : நன்றி ரமாஜி ! உங்களுக்கும் என்னை போலவே ஒரு அனுபவம் இருக்கிறதா...!?

@ மனோ சுவாமிநாதன் : நன்றி மேடம்!, தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.

@ வெற்றிமகள் : நன்றி மேடம்!, தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்.

Pushpa சொன்னது…

marakka mudiyadha engal mangalam perimma!

Thanai thalaivi சொன்னது…

நன்றி புஷ்பா ! முதல் வருகைக்கும், கருத்துக்கும்.

ஆம் ! சித்தி என்றும் மறக்க முடியாதவர் தான்

கவிநயா சொன்னது…

மனசை நெகிழ வைத்த பதிவு; பகிர்வு.

Thanai thalaivi சொன்னது…

நன்றி கவிநயா ! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் !

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சொல்லாமல் சொல்லி கொடுத்த வாழ்க்கை பாடங்கள் கனக்கவைத்தது..

Thanai thalaivi சொன்னது…

@ ராஜராஜேஸ்வரி : நன்றி மேடம் ! தங்கள் வருகைக்கும்,கருத்துக்களுக்கும்.

பெயரில்லா சொன்னது…

மனதை மிகவும் நெகிழ வைத்தது உங்களின் இந்தப் பதிவு. எல்லாம் இருந்தும் மனதில் திருப்தி இல்லாமல் வாழும் மனிதர்கள் நடுவில் உங்கள் சித்தி ஒரு அபூர்வ மனுஷி தான்.

Thanai thalaivi சொன்னது…

@ ரஞ்சனிநாராயணன் : நன்றி மேடம் ! தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

// எல்லாம் இருந்தும் மனதில் திருப்தி இல்லாமல் வாழும் மனிதர்கள் நடுவில் உங்கள் சித்தி ஒரு அபூர்வ மனுஷி தான்.//

நான் சித்தியின் வளர்ப்பு என்பதில் எனக்கு பெருமையே.

Siddharth சொன்னது…

நானும் உங்களுடைய சித்தியின் வளர்ப்பே

Thanai thalaivi சொன்னது…

@siddharth : yes Hari! welcome to my blog.