திங்கள், ஜூன் 11, 2012

என் விரு(ழு )துகள்

நாம் ஆதர்சமாய் நினைக்கும் நபர்களுடன் நமக்கு தொடர்பு ஏற்படுவதே ஒரு பெரிய அதிர்ஷ்டம் தான். அவர்களிடமிருந்தே பாராட்டும் விருதும் கிடைப்பதென்றால் ....!!! விவரிக்க வார்த்தைகளே இல்லை.

அப்படிபட்ட ஒருவரிடமிருந்து இப்போது எனக்கு ஒரு விருது கிடைத்திருக்கிறது. ஏற்கனவே பிப்ரவரி மாதம் மதுராகவி ரமாஜி ஒரு விருது கொடுத்தார். விருது பெற்றால் என்ன செய்யவேண்டும் என்று கூட சரியாக தெரியாததால் வழக்கம்போல் குழம்பிக்கொண்டே இருந்துவிட்டேன். இது தான் அந்த விருது.



நன்றி ரமாஜி !

இந்த முறை விருது வழங்கி இருப்பவர் திருமதி.உஷா ஸ்ரீகுமார் அவர்கள். மங்கையர் மலரில் இவர்களின் பதிவுகளை பல வருடங்களாக படித்திருக்கிறேன். இவரது கலை பயிற்சிகள் பலவற்றை வீட்டில் செய்து பார்த்திருக்கிறேன்.

இவர்கள் மகனை பள்ளியில் சேர்க்க நேர்காணலுக்கு தயார் செய்ததை பற்றி நகைச்சுவையாக ஒரு முறை எழுதி இருந்தார். "எத்தனை முறை சொல்லி கொடுத்ததும் அவனுக்கு உன் அம்மா பெயர் என்ன என்று கேட்டால் "உச்சா தீகுமார் " என்று தான் சொல்லவந்தது." (என்ன சரியா மேடம் ?, அந்த உங்கள் மகன் இப்போது என்ன செய்கிறார்?)

திருமதி.உஷா ஸ்ரீகுமார் அவர்கள் கொடுத்த விருது.


விருது பெறுபவர்களுக்கு சில விதிகள் சொல்லபட்டிருக்கின்றன.
அவர்கள் தங்களை பற்றி சில வார்த்தைகள் மூலம் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். விருது கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மேலும் ஐந்து பதிவர்களுக்கு இந்த விருதுகளை பகிர்ந்தளிக்க வேண்டும்.

உஷா மேடம் !

இந்த விருதுக்கு நான் தகுதியானவள் தானா என்ற குழப்பம் இன்னமும் நீடித்தாலும், "பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று முதலில் நம்பவேண்டும்" என்று என் அம்மா சொல்வார். அதனால்  எழுத்துலகில் பலவருடங்களாக அனுபவமுள்ள நீங்கள் தருவதை பணிவோடு பெற்றுக்கொள்கிறேன். நன்றி மேடம் !

இப்போது என்னை பற்றி :

என்னை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை.

ஒரு மத்தியதர குடும்பத்தின் தலைவி. ஆனால், நான் பிறந்த இந்த நாட்டிற்கு எதாவது உருப்படியாய் செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என் உள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கிறது.

பத்தாம் வகுப்பு படிக்கும் போது கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு (எழுபத்தி ஐந்து ரூபாய் ). அது தான் என் அங்கீகரிக்கபட்ட முதல் எழுத்து பணி .

2010இல் மங்கையர் மலரில் வெளியான அரை பக்க கட்டுரை.

இப்போது ஒரு வருடமாக வலைத்தளத்தில் எழுதி கொண்டிருக்கிறேன்.

வாழ்வின் மிக கடினமான சமயத்தில் என் தலைவன் வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கி வைத்தார். என் அக்கா, "உனக்கு நன்றாக எழுதவருகிறது. நீ பிளாக்கர் இல் எழுதேன்." என்ற போது பிளாக்கர் என்பது ஏதோ பர்கர் போன்ற வெளிநாட்டு தின்பண்டம் என்று நினைத்துவிட்டேன். :)))

நான் வலைத்தளத்தில் எழுதி இந்த இடத்தில் இருப்பேன் என்று ஒரு வருடம் முன்பு யாரவது சொன்னால் நிச்சயமாக நம்பியிருக்க மாட்டேன். எனக்கு ஊக்கமளித்து வரும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த  நன்றிகள்.

இந்த விருதை பகிர்ந்து கொள்ளும் பதிவர்கள்.

under the mango tree : இவரை என் தமக்கை என்பதால் இங்கே முன்மொழியவில்லை. விருது பெறுவதற்கான எல்லா தகுதிகளும் உடைய பல்துறை நிபுணத்துவம் பெற்றவர். இவரை வலையுலகத்தில் அறிமுகம் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக இதை கருதுகிறேன். அக்கா, "நீங்கள் உங்கள் வசதிப்படி ஆங்கிலத்திலேயே எழுதலாம்."

மதுராகவி : நானும் இவரும் ஒரே சமயத்தில் தான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தோம். ஒரு புத்தகமாவது எழுத வேண்டும் என்பது அவர் லட்சியம் என்று ஒருமுறை எழுதி இருந்தார். அப்போது தான் எனக்கு தோன்றியது, "ஆஹா ! இத்தனை பெரிய இலட்சியங்களோடு இவர்கள் வாழும்போது நாம் அடுத்த வேளை சமைப்பதை தவிர வேறு சிந்தனைகள் இல்லாமல் வாழ்கிறோமே", என்று.

தக்குடு : என் சகோதர்களில் ஒருவன். இவன் எழுத்துக்களை படித்தால் எல்லோருக்கும் இவனை "எங்கள் வீட்டு பிள்ளை" என்று சொல்ல தோன்றும். நக்கல்,குறும்பு மட்டுமல்ல ஆன்மீகத்தையும் ரசிக்கும்படி எழுதவல்லவன்.

தம்பி!, உன்னை ஒருமையில் குறிப்பிட்டிருப்பதை நீ பொருட்படுத்த மாட்டாய் என்று நினைக்கிறேன்.

கவிநயா : வலையுலகத்தில் புகுந்த புதிதில் பரதத்தை பற்றி அறிய தேடி அலைந்த போது இவர்களின் தளத்திற்குள் புகுந்து விட்டேன். ஆன்மீகத்தை எப்படியெல்லாம் கடைப்பிடிக்க முடியும் என்று இவர்களை பார்த்து தான் தெரிந்து கொள்ளமுடியும். கவிதையால்,நடனத்தால், கட்டுரைகளால், வாழ்க்கை முறையாலும் ஆன்மிகம் வளர்க்கிறார் இவர்.

எல்.கே : "அதீதம்" இணைய பத்திரிகையின் ஆசிரியர். தொழில் நுட்ப செய்திகைளை தந்து மிகவும் உதவியாக இருக்கிறார். இவர் தனது மகளை ஆச்சர்யத்துடன் நோக்கி எழுத்தும் பதிவுகள் சுவாரசியமானவை.

விருதை என்னோடு பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.


13 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் !

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் !

பன்முகத் திறமையாளரான திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களிடமிருந்து நாம் விருது பெறுவது என்பது சாதாரணதொரு விஷயமே அல்ல.

இந்த இணைப்பைப் படியுங்கள்:
http://gopu1949.blogspot.in/2012/02/versatile-blogger-award.html

இந்த ஆண்டின் முதல் விருதினை அவர்களிடமிருந்து நான் பெற்றதும், அடுத்தடுத்து ஆறு விருதுகள் கிடைக்கப் பெற்றேன்.

vgk

தக்குடு சொன்னது…

விருது குடுத்த தா.தலைவி அக்காவுக்கும் வாங்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

குறிப்பு - அக்கா ஒருமையில் அழைத்ததில் மகிழ்ச்சியே! :)

Kavinaya சொன்னது…

//பன்முகத் திறமையாளரான திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களிடமிருந்து நாம் விருது பெறுவது என்பது சாதாரணதொரு விஷயமே அல்ல.//

மனமார்ந்த வாழ்த்துகள் தானைத் தலைவி! இதற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர்தான். என்னையும் நினைவு கூர்ந்து விருது கொடுத்த அன்பு நெகிழ வைக்கிறது. மிகவும் நன்றி! விரைவில் ஆவன செய்கிறேன் :)

எல் கே சொன்னது…

thanks :) (eluthama irukara enaku award thanathuku nandri :D)

சுசி சொன்னது…

@ ராஜராஜேஸ்வரி : நன்றி மேடம் ! தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும்.

@ வை.கோபாலகிருஷ்ணன் : நன்றி சார்!, தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும்.

@ தக்குடு : நன்றி தம்பி ! நீதான் ஏப்ரல் ஒண்ணாம் தேதி சமாசாரத்தை சரியாய் கண்டுப்பிடித்திருக்கிறாய்.

@ கவிநயா : மிக்க நன்றி கவிநயா ! வாழ்த்துகளுக்கும்,ஊக்கத்திற்கும்.

@ எல்.கே : நன்றி சார் ! தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும்.

Usha Srikumar சொன்னது…

வாழ்த்துக்கள்...தானைத்தலைவி ....
நான் கூட கிட்டத்தட்ட மறந்து விட்ட அந்த சிறுகதையை நினைவு வைத்துக்கொண்டு எழுதியதற்கு நன்றி.

//அந்த உங்கள் மகன் இப்போது என்ன செய்கிறார்?//

இப்போது அவன் தான் எனக்கு ப்ளாக் ஆசான்!

Time flies...

Pushpa சொன்னது…

hope to see thousand more posts from you akka!!! long live your keys(keyboard:))

எல் கே சொன்னது…

http://lksthoughts.blogspot.in/2012/06/blog-post_6473.html

'பரிவை' சே.குமார் சொன்னது…

பெற்ற விருதுக்கும்
நண்பர்களுக்கு அளித்த விருதுக்கும்
வாழ்த்துக்கள் சகோதரி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் சகோதரி !

உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி

சுசி சொன்னது…

@ புஷ்பா : நன்றி புஷ்பா ! கமெண்ட்ஸ் போடறதோட நிற்காம போஸ்டும் போடு.

@ சே. குமார் : நன்றி சார் ! தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்.

@ திண்டுக்கல் தனபாலன் : நன்றி சார் ! தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும். விரைவில் widget இணைக்கிறேன்.

@ எல்.கே. : வாழ்த்துக்கள் சார் ! உங்களுக்கு ரொம்ப பெரியமனசு எல்லாருக்குமே விருது கொடுத்துடீங்களே ! :))

unknown சொன்னது…

வணக்கம்
வாழ்த்த்துக்கள்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....