வியாழன், ஆகஸ்ட் 22, 2013

ரீ என்ட்ரீ

இந்த சினிமா நட்சத்திரங்கள் எல்லாம் கல்யாணம் பண்ணி கொஞ்ச காலம் நடிக்காம இருந்துட்டு திரும்பவும் நடிக்க வரும்போது அதற்கு நிறைய தடபுடல் இருக்கும். நான் என்ன நடிக்கவா செய்யறேன். அதனால என் ரீ என்ட்ரி க்கு எந்த ஆர்ப்பாட்டமான வரவேற்பும் தேவையில்லை (நீ கேட்டாலும் இங்க யாரும் குடுக்க தயாரில்லை).

என் தம்பியின் திருமணதிற்கு பின், என் கம்ப்யூட்டர் ரொம்பவே தொல்லை கொடுத்து விட்டது. நிறைய சர்வீஸ் இன்ஜினீயர்கள் வந்து பார்த்து விட்டு, அதனால தான் இதனால தான் என்று காரணம் சொல்லிவிட்டு போனார்கள். ஏதோ ஒரு அஜீத் படத்துல ஆட்டோ கண்ணாடிய திருப்பினா ஆட்டோ கிளம்புமே அந்த மாதிரி,"மேடம்!, உங்க கேஸ் அடுப்ப கொஞ்சம் நிறுத்துங்க !, அது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாய் இருக்கும்!", ன்னு தான் யாரும் சொல்லலை.

அந்தளவுக்கு புதுமையான காரணங்கள் சொல்லப்பட்டன. அவ்வப்போது என் தம்பியின் லாப் டாப்பிலும், பிரௌசிங் சென்டரிலும் சென்று மெயில் மட்டும் பார்த்து வந்தேன். அப்போதெல்லாம் வலை உலகத்தில் என்ன நடக்கிறதோ தெரியவில்லையே என்ற ஏக்கம் பிடித்து வாட்டும். ஒரு சில தளங்களில் மட்டும் சென்று அவ்வப்போது சில கமெண்டுகளை தூவிவிட்டு போய் விடுவேன்.

இத்தனை நாட்களும் என்னை யாரும் தேடியிருக்க மாட்டார்கள் (தேடுகின்ற அளவிற்கு நான் ஒன்றும் பெரிதாக எழுதிவிடவில்லை).

இருந்தாலும், " நான் வந்துட்டேன்............!" என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

ரீ என்ட்ரி யை ஒரு நல்ல செய்தியோடு ஆரம்பிப்போம் என்று எண்ணுகிறேன்.

சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாட பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. வரும் செப்டெம்பர் 11 ஆம் தேதி  (அன்று சுவாமிஜி சிகாகோவில் சொற்பொழிவாற்றிய நாள்) சென்னை கடற்கரையில் உள்ள ஸ்ரீ விவேகானந்தர் இல்லத்தில் மாலை நான்கு மணிக்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. பெரிய தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர். பின்னர், விவேகானந்தர் இல்லத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை  "தேசத்திற்காக ஓடுவோம்", என்ற  ஒரு ஓட்டம் (mass run ) நடைபெற உள்ளது. இதில் பதினெட்டு முதல் நாற்பது வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டு ஓடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, எல்லோரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு தேச பணியில் பங்கு பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.



5 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

மீண்டும் பதிவுலகம் வருகை...
வாருங்கள்... வாழ்த்துக்கள்...
தொடர்ந்து கலக்குங்க...

Kavinaya சொன்னது…

வாங்க தலைவி! ஒரு வழியா காஸ் அடுப்பை நிறுத்தி கணினியை சரி பண்ணீட்டிங்க போல! உங்களை மிஸ் பண்ணின ரசிகர் கூட்டத்தில் நானும் ஒருத்தி :) உங்கள் கலக்கல்களை எதிர்பார்த்து...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒன்னும் சொல்வதற்கில்லை...

வாருங்கள்...

வாழ்த்துக்கள்...

ஹுஸைனம்மா சொன்னது…

//என் தம்பியின் திருமணதிற்கு பின், என் கம்ப்யூட்டர் ரொம்பவே தொல்லை கொடுத்து விட்டது.//

இந்த ரெண்டுக்கும் எதோ சம்பந்தம் இருக்குதோ? :-))

//"மேடம்!, உங்க கேஸ் அடுப்ப கொஞ்சம் நிறுத்துங்க !, அது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாய் இருக்கும்!", ன்னு தான் யாரும் சொல்லலை.//

அப்படி யாராவது சொல்ல மாட்டாங்களான்னு எதிர்பார்த்த மாதிரி இருக்கே! :-)))

வெல்கம் பேக்!!

சுசி சொன்னது…

@ சே.குமார் : நன்றி சார் !

@ திண்டுக்கல் தனபாலன் : நன்றி சார் !

@ கவிநயா : நன்றி கவிநயா வைர நெஞ்சுள்ள தைரிய சாலிகள் ஒரு நாலு பேராவது இருக்கீங்களேன்னு நினைச்சு சந்தோஷ படறேன்.

@ ஹுச்சைனம்மா : இருக்கும் என் தம்பிதான் அவன் மனைவிக்கு என் அக்கா எழுதியதை எல்லாம் படின்னு சொல்லி லிங்க் அனுப்பினானாம். பெண் பாவம் பொல்லாதது. :))

காஸ் அடுப்பை நிறுத்த வேண்டிய அவசியமில்லைங்க. அதை தலைவர் தலையில் கட்டிடலாம் (அவர் சூப்பரா சமைப்பார் !). :)))