ஞாயிறு, அக்டோபர் 09, 2011

லக்ஷ்மி கடாக்ஷம் - பகுதி - 1


பதிவுலக சகோதர சகோதரிகளே !

நலம் தானே !, நானும் என் சுற்றமும், நட்பும் யாவரும் நலமே. நவராத்திரி கொண்டாடங்கள் இனிமையாய் கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எனக்கும் நவராத்திரி மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும், உடல் நிறைந்த வலிகளோடும் இனிதே முடிந்தது. "வலிகள் எப்பவும் இருக்கிறது தானே இப்போ என்ன புதுசா!", என்கிறீர்களா. அதுவும் சரிதான்.

இம்முறை குழந்தைகள் மூன்று கோவில்களில் நடனமாடினார்கள். புதுசா கொலு படி வாங்கினோம். அஷ்டலக்ஷ்மி செட் வாங்கினோம். இவை யாவற்றையும் விட மகிழ்ச்சியான விஷயம், சுமார் பதினேழு வருடங்களுக்கு பின் என் உயிர் தோழியை சந்தித்ததும், அவளுடனான நட்பை புதிப்பித்து கொண்டதுமாகும்.

என் இள வயது தோழிகள் மதுபாலா, ஜோத்ச்னா ஆகியோரை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன். இருவருக்குமே ஆணும், பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள், நல்ல கணவன், மது தொழில் ரீதியாகவும் நல்ல நிலையில் உள்ளாள். 

மதுவை சென்ற வருடமே சந்தித்து விட்டேன். அது ஒரு சுவாரசியமான நிகழ்வு.   ஜோத்ச்னாவை தற்செயலாய் சாலையில் சந்தித்தேன். மிக்க மகிழ்ச்சி  அடைந்தாள். இருவரும் பரஸ்பரம் குடும்பத்துடன் மற்றவர் வீட்டிற்கு சென்று வந்தோம்.

குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளை செல் போனில் தான் படம் பிடித்தேன். அவற்றை இங்கே இணைக்கிறேன். எவ்வளவு தெளிவாக இருக்குமோ தெரியவில்லை. எனக்கு எதையுமே சுருக்கமாக சொல்ல தெரிவதில்லை. விஜய தசமி அன்று ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி நடந்தது. அதை அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.



7 கருத்துகள்:

ஹுஸைனம்மா சொன்னது…

//எனக்கு எதையுமே சுருக்கமாக சொல்ல தெரிவதில்லை. //

இந்தப் பதிவைப் பாத்தா அப்படித் தெரியலையே? ‘மினி மீல்ஸ்’ மாதிரின்னா இருக்கு? :-)))))

கே. பி. ஜனா... சொன்னது…

ஆனால் சுருக்கமாக சுவாரசியமாக சொல்லியிருக்கிறீர்கள்...

சுசி சொன்னது…

@ ஹுசைன்னம்மா : ஹலோ ! மேல அப்படியே கொஞ்சம் தலைப்பை பாருங்க, பகுதி - 1 ன்னு போட்டிருகிறதை அப்படின்னா இன்னும் எத்தனை பகுதி வருமோ !

@ கே.பி.ஜனா : நன்றி ஐயா, தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

வாவ்...குட்டிஸ் கலக்கறாங்க போல இருக்கே...;)

RAMA RAVI (RAMVI) சொன்னது…

குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்,தா.தலைவி.

குறையொன்றுமில்லை. சொன்னது…

ஆஹா குழந்தைகளுக்கு திருஷ்டி சுத்தி போடுங்கோ

சுசி சொன்னது…

@ தங்கமணி : நன்றி தங்கமணி.

@ ரமாஜி : நன்றி ரமாஜி !

@ லக்ஷ்மி அம்மா : நன்றி மாமி ! நிச்சயமாய் !