வியாழன், ஜூன் 07, 2012

என் தலயின் தலையெழுத்து

அம்பது ரூபாய் பொருளை "பார்டி நைன் ருபீஸ் பிப்டி பைஸ்னா தாங்க !" என்று பேரம் பேசி வாங்கியதையே பெருமையாக நினைக்கும் சென்னை நகரத்து அப்பாவி யுவதிக்கும், அதே அம்பது ரூபாய் பொருளை அடித்து பேரம் பேசி ஐந்து ரூபாய்க்கு வாங்கும் கிராமத்து சாமர்த்தியசாலி இளைஞனுக்கும் சம்பந்தம் ஏற்பட்டதை விதியின் விளையாட்டு என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது...!

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று இழுக்கும் என்ற அறிவியல் விதிகேற்ப நானும் என் தலயும் சேர்ந்துவிட்டோம்.


ஆனாலும், அவரது தன்னம்பிக்கை அலாதியானது. என்னை மாதிரி ஒரு செலவாளியையும் தன்னால் சமாளிக்க முடியும் என்ற அவரது உறுதியான நம்பிக்கையை என்னவென்று சொல்வது. 

நான் செய்தாலே அது அனாவசிய செலவாகத்தான் இருக்கும் என்பது அவரது திடமான எண்ணம். "இப்போதெல்லாம் நான் அப்படி இல்லை திருந்திவிட்டேன்." என்று நானே சொல்லியும் ஒரு பயனும் இல்லை.

"நகை வாங்கினால் கல் வைத்த நகை வாங்க கூடாது அதை திரும்ப போட்டால் நிறைய நஷ்டம் வரும்." என்று சொல்லி என் கல் நகை அணியும் ஆசையில் கல்லை தூக்கி போட்டு விடுவார்.

ஒரு முறை என் தங்கையிடம், "அத்திம்பேருக்கு கல் நகையே பிடிக்காது, அத போட்டா பாதி கூட தேராதும்பார்." என்று நான் சொல்லவும் அவளோ அப்பாவியாக "நகையை போட்டுண்டா ஏன் தேறாது ?" என்று புரியாமல் விழிக்க. நான் "இப்படி போட்டுண்டா இல்ல (கழுத்தை சுற்றி காண்பித்து ) இப்படி போட்டா" என்று துர எறிவது போல் சைகை காட்டவும் "ஐயோ ! வாங்கும் போதே யாராவது போடறத பத்தி யோசிப்பாளா ?" என்று அதிர்ச்சியாகி விட்டாள் . 

காஸ் அடுப்பு கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் வாங்கிய ஒரு காஸ் அடுப்பு. அதை தூக்கி தினமும் தேய்க்கும் எனக்கு வெய்ட் லிப்டிங்கில் தங்க பதக்கமே கொடுக்க வேண்டும். அதை மாற்றி தரசொல்லி நானும் தர்ணா போராட்டமெல்லாம் நடத்தியாகிவிட்டது.

ஒரு கால் உடைந்து ஒரு பக்கமாய் குடைசாய்ந்து இருக்கும் ஒரு எலெக்ட்ரிக் ரைஸ்குக்கர். குழந்தைகளின் புழுக்கை பென்சில்களை அதற்கு அண்ட கொடுத்துத்தான் அதில் சாதமே சமைக்க வேண்டும். 

இதையெல்லாம் மாற்றி தர சொன்னால் அது அனாவசிய செலவாம் . "ஏன் ? வெடிக்காம,வடிக்கரதொல்யோ ? அது போறாதா ? " ன்னு வேற எடக்கா ஒரு கேள்வி.

கடைசியில் ஊரிலிருந்து வந்த அவரின் ஒன்று விட்ட அக்கா, ஒன்று விட்ட தம்பியின் மனைவி எல்லோரும் "எப்படி இதுல சமைக்கிறேங்க !?" என்று கேட்க ஆரம்பிக்கவும், "சரி இப்படியே விட்டா இதுவே இவளோட சாதனையா ஆனாலும் ஆகிடும்ன்னு", பயந்து புதுசா காஸ் அடுப்பும்,ரைஸ் குக்கரும் வாங்கறதுக்கு ஒத்துகிட்டார்.

முதல்ல விவேக்ஸ் தான் போனோம். நாங்கள் உள்ளே நுழைந்தவுடன் அங்கே இருந்த எல்லா டிவிலையும், "வேணா மச்சான் வேணா இந்த பொண்ணுங்க காதலு" என்று பாட ஆரம்பித்து விட்டது.

"ஏம்ப்பா, பொண்ணுங்க காதல் வேண்டாம்ன்னா ,பின்ன வேற யார காதலிப்பாங்க..!?" என்று அப்பாவியாய் டௌட் கேட்ட என்னை ஒரு முறை முறைத்து விட்டு, "ம்ம்ம்ம்.... அந்த பாட்டு உனக்கில்ல எனக்கு", என்றார் கோபமாக.

அங்கே ரைஸ் குக்கரை செலக்ட் செய்து கொடுத்து விட்டு நான் பராக் பார்க்க போய்விட்டேன். அவரிடம் மாட்டிகொண்ட சேல்ஸ் லேடி பாவம். கையில் துண்டு போட்டு பேரம் பேசாத குறையாய் நன்றாக கல்லில் நார் உரித்து கொண்டிருந்தார்.

பின்னர் எல்லாம் முடிந்து எடுத்தாரே அந்த கிப்ட் கூப்பனை,பாவம் அந்தம்மா. என்னிடம் வேறு இரகசியமாக "நாம இந்த கடைக்கு ஏன் வந்தோம்கிற விஷயம் இப்பத்தான் அந்தம்மாவுக்கு புரிஞ்சிருக்கும் இல்ல..!?" என்று வேறு சொல்லி சிரிக்கிறார்.

அடுத்தது, தாம்பரம் சரவணாஸ் போனோம். இங்கு காஸ் அடுப்பு வாங்க. ப்ரெஸ்டிஜ் அடுப்பு நன்றாக இருந்தது. ஆரம்பித்து விட்டார் "அது காஸ்ட்லி
வேற வாங்கிக்கோ" என்று ஒரே தொனப்பல்.

"மனைவிய ரொம்ப நேசிக்கிறவங்க ப்ரெஸ்டிஜ் வேணாமுன்னு சொல்ல மாட்டாங்க" இந்த விளம்பரத்த நீங்க பார்த்ததில்ல....?

"நான் நேசிக்கலடி, எனக்கு ப்ரெஸ்டிஜ் வேணாம்."

"என்ன சொன்னீங்க....!?" (கர்ர்ர்ரர்ர்ர்.....)

"ஏய் ! கோவபடாதப்பா ரெண்டு பர்னர் இருக்கிறது வாங்கிக்கோ போரும், மூணு பர்னர் அடுப்புக்கும் ரெண்டு பர்னர் அடுப்புக்கும் ஆயிரம் ரூபாய் வித்தியாசம் வருது, ஒரு பர்னருக்கு ஆயிரம் ரூபாயா...! :((" என்று கெஞ்சி எல்லாம் பார்த்தார்.


"பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா" என்று கேட்கும் கவுண்டமணி போல் "மூணு பர்னரே தான் வேணுமா,"ன்னு எல்லாம் கேட்டு பார்த்தார்.


"நான் என்ன அடுப்பு மேல நின்னுண்டு டான்சா ஆடபோறேன், உங்களுக்கு சமைச்சு போடத்தானே கேட்கிறேன். மூணு பர்னர் அடுப்பும், ரைஸ் குக்கரும் இருந்தா ஸ்கூல் திறந்த உடன் ரொம்ப உபயோகமா இருக்கும்." என்று தீர்மானமாக சொல்லிவிட்டேன்.



நான் சண்டித்தனமாக மண்டையை ஆட்டுவதை பார்த்த அந்த சேல்ஸ் மேனுக்கு மனசுக்குள் ஒரே வானவேடிக்கை தான். "ஹையா ! இந்தம்மா புடிவாதம் புடிக்க ஆரம்பிசிடிச்சு விலை எப்படி இருந்தாலும் இந்த ஆளு வாங்கித்தான் ஆகணும் என்று ஒரே குஷி. அது அவன் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது.

விவேகில் பிடித்ததை எல்லாம் சரவணாசில் விட்ட எரிச்சலோடு, அழுது கொண்டே வாங்கி கொடுத்தார்.

வீடு வந்து சேர்ந்த போது என் உடன்பிறப்பு வீட்டு வாசலில் காத்திருந்தான். கைநிறைய சாமான்களோடும், முகம் நிறைய பூரிப்போடும் வந்த என்னை பார்த்த அவன் கண்களில், உலக கோப்பையை வென்று வந்த மகளை பார்க்கும் ஒரு தந்தையின் பெருமிதம் தெரிந்தது.

"ஐ..அத்திம்பேர் உனக்கு இதெல்லாம் வாங்கி கொடுத்திருக்காரே அக்கா வெரி குட்..!" என்றவனிடம்,

"உன் அக்காவ அங்கேயே விட்டுட்டு வந்திருப்பேன், ஆனா சொல்லமுடியாது, அங்கிருந்து கால் டாக்ஸி புடிச்சு வந்திட்டு, அதுக்கும் ஐந்நூறு ரூபாய் குடுங்கன்னு சொன்னாலும் சொல்லுவா, அப்புறம் அதையும் நான் தானே அழணும்னு தான் கதறி அழுதுகிட்டே எல்லாத்தையும் கேட்ட மாதிரியே வாங்கி கொடுத்து கூட்டிட்டு வந்துட்டேன்." என்றவரை பார்க்க பரிதாபமாக தான் இருந்தது.

பின் குறிப்பு : காஸ் அடுப்பும், எலெக்ட்ரிக் ரைஸ் குக்கரும் நன்றாக வேலை செய்கிறது.

படங்கள் உதவி : google.

14 கருத்துகள்:

ஹுஸைனம்மா சொன்னது…

கிட்டத்தட்ட.... கிட்டத்தட்ட என்ன, கிட்டட்தட்ட, முழுசுமே.. எங்கவீட்டுக் கதைதான். ஆனாலும், மொபைல்ஃபோன், கார், லேப்டாப் அவ்ளோ ஏன், ஷேவிங் செட்லயெல்லாம்கூட கணக்குன்னா என்னன்னே தெரியாது. நாம வாங்கிற நகைலதான்..

//கல் வைத்த நகை வாங்க கூடாது அதை திரும்ப போட்டால் நிறைய நஷ்டம் வரும்//
இப்பிடித்தான் எங்காளும் சொல்லிட்டிருந்தார். விடுவேனா, நான்? வெறுங்கல்லுன்னாதான் நஷடம். அதுவே வைரக்கல்லுன்னா லாபம்தான்னு சொல்லி, ஆப்பு வச்சாச்சு!! :-))))

//அங்கேயே விட்டுட்டு வந்திருப்பேன், ஆனா .. அங்கிருந்து கால் டாக்ஸி புடிச்சு வந்திட்டு, அதுக்கும் ஐந்நூறு ரூபாய் குடுங்கன்னு சொன்னாலும் சொல்லுவா//
ஸேம் ப்ளட்!! இதுக்காகவே என்னை இன்னும் தொலைக்காமல் இருக்கார்!! :-((((

Usha Srikumar சொன்னது…

ஹையோ!!!வயிறு புண்ணாகிவிட்டது உங்கள் கூட ஷாப்பிங் வந்து...Hilarious!!!

Usha Srikumar சொன்னது…

Thaanaithalaivi,
Do visit my blog
http://ushasrikumar.blogspot.in/2012/06/another-awarda-versatile-blogger-award.html

There is a surprise in store for you...
You deserve it!

Under the Mango Tree சொன்னது…

Yarai pavamnu solradhu, unnaiya illa unga aathukararaya?

Kavinaya சொன்னது…

உங்க தங்கை உங்களை விட அப்பாவியா இருப்பாங்க போல :) எப்படியோ நினைச்சதை வாங்கீட்டீங்க இல்லை? இனியாவது ஆத்துக்காரருக்கு நல்லா சமைச்சுப் போடுங்க! :)

சுசி சொன்னது…

@ ஹுசைனம்மா : நல்ல ஐடியாவா தான் இருக்கு. செயல் படுத்தி பார்த்துர வேண்டியது தான். ஆனா, வைரத்துல ராசி,தோஷமெல்லாம் இருக்காமே அது தான் கொஞ்சம் யோசனையா இருக்கு. :)))

@ உஷா ஸ்ரீகுமார் : ரசித்து படித்தமைக்கும், விருதுக்கும் நன்றி மேடம் ! பதிவை விரைவில் தயார் செய்து விடுகிறேன்.

@ under the mango tree : யாருமே பாவம் இல்லக்கா ! இது வீட்டுக்கு வீடு இருக்கிறது தானே, எல்லோரும் ரசிக்கட்டுமே என்று கொஞ்சம் ஹுமர் சேர்த்தேன்.

@ கவிநயா : என் தங்கை அப்போ அப்பாவியாத்தான் இருந்தாள். இப்போ திருமணமாகி விட்ட பின் விவரமாகி விட்டாள். :))

நல்ல சாப்பாடு விரைவாகவும் கிடைப்பதில் தலைவருக்கு ரொம்ப திருப்தி இப்ப. இத முதல்லையே செஞ்சிருந்தா என்னவாம். இப்படி அவரை கலாய்த்து பதிவு போடவேண்டி வந்திருக்காது அல்லவா ! :)))

எல் கே சொன்னது…

pavam mams

சுசி சொன்னது…

@ எல்.கே : நீங்களாம் இப்படித்தானே சொல்வீங்க !

Pushpa சொன்னது…

sueprana post.....kalakureenga akka..
naduvula enna vera ezhuthuteenga pola:):)hmmmm sari sari evvalavo thaagnurom edhayun thaanguvom!!!:)

Pushpa சொன்னது…

ellam sari...ungal ezhuthukku ezhudhukolaga amaindha enga athimbarekku oru thanks sollirkkalam...

R. Gopi சொன்னது…

:-))))

சுசி சொன்னது…

thanks gopi !

Nathanjagk சொன்னது…

சரளமான சந்தோஷ நடை! எண்ணிய எண்ணுயாங்கு எய்துப திண்மை டிஸிஷன் மேக்கர் எனப்படும் படும் ;)

சுசி சொன்னது…

@jaganathan : நன்றி சார்! முதல் வரவுக்கும், கருத்துக்கும்.