செவ்வாய், செப்டம்பர் 10, 2013

தவமாய் தவமிருந்து...

இதே சிங்கார சென்னையில ரொம்ப வருஷம் முன்னாடி நடந்த கதை இது.

அவங்க ஒரு இளம் தம்பதி. அவங்களுக்கு குழந்தை இல்லைன்னு ரொம்ப வருத்தம். அவங்களுக்கு குழந்தை இல்லைன்னு சொல்லமுடியாது. என்னன்னா, அந்த அம்மாவுக்கு ரெண்டு மூணு தரம் உண்டாகி உண்டாகி கலஞ்சிடிச்சி.

இப்படி நடந்ததால அந்தம்மா ரொம்ப வருத்தப்பட்டாங்க. டாக்டர் கிட்ட போனாங்க. டாக்டரும் ஒண்ணும் பெரிசா பிரச்சனை இல்லைன்னு சொல்லி மருந்து குடுத்தாங்க.

அந்த அம்மாக்கு கடவுள் நம்பிக்கை ரொம்ப அதிகம். அதனால, அவங்க நாத்தனார் கிட்ட குழந்தை பிறக்கறதுக்கு எதாவது பரிகாரம் பண்ணலாமான்னு கேட்டாங்க. அவங்களும், அம்பாள் உபாசன பண்ற ஒரு மாமி கிட்ட தம்பி பொண்டாட்டிய கூட்டிகிட்டு போனாங்க.


அந்த மாமி அம்பாள நல்லா பூஜை பண்ணி, ஒரு வாழப்பழத்துல்ல அம்பாள் மந்திரத்தை ஜபிச்சு குடுத்து , "இதை ஸ்வாமியை வேண்டிண்டு சாப்பிடு குழந்தை தங்கும்,"ன்னு சொல்லி அனுப்பினாங்க.

அந்தம்மா அந்த பழத்த பய பக்தியோட வாங்கிட்டு போய் அவங்க வீட்டு ஸ்வாமி ரூம்ல்ல வச்சிட்டு, குளிச்சிட்டு வந்து சாப்பிடலாம்ன்னு போனாங்க.

குளிச்சிட்டு வந்துப்பார்த்தா பழத்த காணூம். எங்க போயிருக்கும்ன்னு பதறிக்கிட்டே அங்கையும்,இங்கையும்மா தேடினாங்க. அப்போ அங்கவந்த அவங்க மாமனார்,"என்ன தேடரம்மா ன்னு?" கேட்டாரு.

"இங்க ஒரு பழம் வச்சிருந்தேன், அதைதான்."

"ஒரு அதுவா சுவாமி பிரசாதம் வீணாபோகக்கூடாதேன்னு நான் தாம்மா சாப்பிட்டேன்."

இத கேட்ட உடனே அந்த அம்மாவுக்கு ரொம்ப பயமா போய்டிச்சு. மாமனார் கிட்ட ஒண்ணும் சொல்லாம, நாந்தனார தேடி ஓடினாங்க. அவங்க அப்பா அந்த பழத்த சாப்பிட்டுட்ட விஷயத்த சொன்னாங்க.

அவங்களும் என்ன செய்யறதுன்னு தெரியாம ரெண்டு பேருமா அந்த மாமிகிட்டே திருப்பியும் போய் விஷயத்தை சொன்னாங்க. அந்த மாமியும்  "பதறாதீங்கோ !, சம்பதம்மில்லாதவா சாப்பிட்டா அது பலிக்காம போய்டும் அவ்வளவு தான் (பின்ன அது என்ன மருந்தா ?!, வியாதி இல்லாதவங்க சாப்பிட்டா கேடு வரத்துக்கு). நான் திருப்பியும் மந்திரிச்சு தரேன், இந்த வாட்டியாவது  ஒழுங்கா சாப்பிடு." ன்னு சொல்லி அடுத்த முறை வெண்ணெயில மந்திரிச்சு கொடுத்தாங்க.

இந்த வாட்டி அந்த அம்மா சரியா அம்பாள் பிரசாதத்த  சாப்பிடவும் அவங்களுக்கு குழந்தை தங்கிடிச்சு. அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம். தனக்கு பக்தியுள்ள குழந்தை பிறக்கனும்ன்னு தினம் தினம் கடவுளை வேண்டிகிட்டே இருந்தாங்க. (ஆனா பாருங்க தனக்கு புத்தி உள்ள குழந்தை வேணும்ன்னு கேட்க அவங்க தவறிட்டாங்க. இதுக்கு தான் சொல்லறது எப்பவுமே நாம கடவுள் கிட்ட கேட்டா சரியா கேட்க தெரியாம போயிடலாம். அதனால கடவுள் தரத ஏத்துக்கணும்.) :)))

இப்படியாக ஒரு கிருஷ்ண ஜெயந்திக்கு மறுநாள் அவங்களுக்கு ஒரு பாப்பா பொறந்துச்சு. பாப்பா அவங்க ஆசைப்பட்டா மாதிரியே ரொம்ப அழகாவும் (!?!?!?), பக்தியாவும் வளந்துது. ஆனா, அந்த பாப்பாவுக்கு தான் ஏன் பொறந்தோம்? தான் இந்த ஒலகத்துல என்ன செய்யணும்? இப்படி எதுவுமே தெரியலை.

இப்படியே அந்த பாப்பா வளர்ந்து பெரிய அக்காவா, அம்மாவாவும் ஆய்டிச்சு. அப்பவும் அவங்களுக்கு அவங்களோட வாழ்க்கையோட குறிக்கோள் என்ன என்கிறது தெரியலை. "நான் பிறந்த நாளில் என்ன சிறப்பு ? எல்லாம் சாதரணமா தானே இருக்கு?" ன்னு நினச்சிக்கிட்டே இருப்பாங்க.  இப்படி தவமாய் தவமிருந்து, நம்மளை நம்ம அம்மா எதுக்கு பெத்தாங்க ன்னு யோசிப்பாங்க.

அப்பத்தான் அவங்களுக்கு "சிநேகா" வ பத்தி தெரிய வந்தது. இவங்க   பிறந்த அதே நாளில் தான் அந்த சிநேகா வும் பிறந்திருந்தா. ஆனா, அவங்கள  விட ரொம்ப சின்னவளா இருந்தாலும் ரொம்ப பெரிய காரியமெல்லாம் அவ செய்யறா. அது என்னனா, யாராவது ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. தற்கொலை பண்ணிக்கலாம் போல இருக்குன்னு சிநேகா கிட்ட சொன்னா, அவ அவங்களுக்கு ஆறுதல் சொல்லி அவங்கள வாழவைக்கிறா.

இது தெரிஞ்சப்ப தான் இவங்களுக்கு ஒரு உண்மை புரிஞ்சுது , "வாழ்க்கைல ஏதாவது ஸ்பெஷல் வேணும் ன்னு நினைக்கிறத விட வாழ்க்கையே ஒரு ஸ்பெஷல் தாங்கிறது தான் அது."

இன்றையநாள் கடவுளால நமக்கு தரப்பட்டிருக்கிறது. இதை பயனுள்ள வகைல கழிக்கன்னும்.

உங்களுக்கு சிநேகாவ தொடர்பு கொள்ளணும்னா இங்க கிளிக் பண்ணி "சிநேகா" ன்னு கூப்பிடுங்க அவ ஓடி வந்திடுவா. இல்லன்னா இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க :044 - 2464 0060.  சிநேகா கிட்ட பேசலாம்.

அப்புறம், ஒரு முக்கியமான விஷயம். நான் மேலே சொன்ன கதைல வந்தவங்களுக்கும் சினேகாவுக்கும் இன்னைக்கு தான் பிறந்த நாள்.

SEPTEMBER 10 :  ANTI-SUICIDE DAY.

வாழ்க்கைங்கிறது ரொம்ப pericious.  வாழறதே பெரிசுங்கிறது, தன் அன்புகுரியவங்களை இழந்தவங்களுக்கு புரியும். "சும்மா, எனக்கு ---------- வாவது வாழ்ந்திருக்க கூடாதான்னு?" அவங்க புலம்பறத கேட்கும் போது நாம ஒவ்வொருத்தரும் பலருக்கும் தேவையா இருக்கோம்.அதை சரியா பூர்த்தி செய்யணும் ன்னு தோணும்.

"எனக்கு அன்பு கிடைக்கல, நான் பரிட்சைல பாசாகல, என்னை யாரும் புரிஞ்சுக்கல", இப்படி நினைக்காம, "நான் அன்பு செலுத்துவேன், நான் பலர் பாசாக ஊக்குவிப்பேன், நான் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிப்பேன்."

 இப்படி நினைக்கலாமே. "தவமாய் தவமிருந்து பெற்ற வாழ்க்கையை வீணாக்கலாமா!?"

வாழ்கை வாழ்வதற்கே.!

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்க்கையே ஒரு ஸ்பெஷல் தான்...

சினேகா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ஹுஸைனம்மா சொன்னது…

ஓ, உங்க பிறந்த நாளா இன்னிக்கு? ஸ்ஸப்பா.. இதச் சொல்ல இப்படிக் குழப்பி, தலையைச் சுத்தவச்சு... இப்ப ஜென்ம சாபலயம் கிட்டிருக்குமே?? :-))))

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!!

Kavinaya சொன்னது…

ஒரு நல்ல விஷயத்தைப் பற்றி வித்தியாசமா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துகள் தானைத் தலைவி! நீங்களும் சிநேகாவுக்கு உதவி செய்யறீங்களா?

சுசி சொன்னது…

@ திண்டுக்கல் தனபாலன் : நன்றி சார் ! ஆனால் சிநேகா அவர்கள் இல்லை. சிநேகா ஒரு அமைப்பு. சுட்டியை கிளிக் செய்து பாருங்களேன்.

@ ஹுசைன்னம்மா : ஹி....ஹி கண்டு பிடிச்சிடிங்களே ! பிறந்த நாளையும்,குழப்பி ஜன்மம் சாபல்யம் அடைந்ததையும். :))) ஆனா, நான் பிறந்த நாளில் என்ன விசேஷம் என்று நான் யோசித்ததும், ஒரு நல்ல காரியம் செய்ய நினைத்ததும் தான் இந்த முயற்சி. நன்றி மேடம். நானறிந்த புத்திசாலி பெண்களில் நீங்களும் ஒருவர்.

@ கவிநயா : நன்றி கவிநயா ! ரொம்ப வருஷமாவே சினேகாவுக்கு உதவனும்ன்னு ஆசை தான். ஆனா அதுக்கு இன்னமும் காலம் கனியவில்லை. இப்போதைக்கு எந்த அமைப்பிலும் சாராமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்களுக்கு மன ஆறுதல் வழங்கி வருகிறேன். இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு இது மிகவும் தேவையாக இருக்கிறது.