புதன், அக்டோபர் 23, 2013

வைகுண்ட வாசம்

 "வைகுண்ட வாசம்", யாருக்கு கிடைக்கும்? யாரு நிறைய புண்ணியம் பண்ணி இருக்காளோ அவாளுக்குத்தான் கிடைக்கும்ன்னு சொல்லுவா. வைகுண்டத்துக்கு போனவாளுக்கு மறு பிறவியே கிடையாதாம். பகவானோடையே வைகுண்டதுலையே இருப்பாளாம்.ஆனா, வைகுண்டத்துல ஆறுமாசம் வாழ்ந்துட்டு திரும்பி நரகத்துக்கு வந்தவர்களை  பற்றி நீங்க கேள்வி பட்டிருக்கிறீர்களா...? நாந்தான் அது (ஐய்....! சுத்தமா மர கழண்டுடுத்து போலிருக்கே !).

"முன்னம் அவன் நாமம் கேட்டாள்" ன்னு ஆரம்பிக்கற "சிவகாமியின் சபதம்" நாவலோட ஹை லைட் அப்பர் தேவார பாடல்ல வருமே ஒரு எடத்துல "பின்னர் அவன் ஆரூர் கேட்டாள்" ன்னு. அந்த மாதிரி எனக்கு என்னவோ ஸ்ரீரங்கத்து மேல ரொம்ப ஈர்ப்பு. (ஓ...! உன்னபத்தி உனக்கு அப்படியெல்லாம் வேற ஒரு நினைப்பா..!)

திருச்சிக்கு ட்ரான்ஸ்பர் ன்ன உடனேயே தலைவர் கிட்ட ஸ்ரீரங்கத்துல வீடு பாருங்கோன்னு சொல்லிட்டேன். அங்க வசதியெல்லாம் எப்படி இருக்கும், சுத்தி இருக்கிறவா எப்படி இருப்பா, அங்க வீடு கிடைக்குமா, இப்படி எதை பத்தியுமே யோசிக்காம சொன்னேன். தலைவரும் அப்பல்லாம் "மனைவி சொல் மிக்க மந்திரமில்லை" ன்னு தான் இருந்தார். (கல்யாணமான புதுசு இல்லியா,அதான்...!) (நீ போன பின்னாடி அங்க இருக்கிறவா எப்படி இருந்தா?, ஓடி இருப்பாளே!)

 ஆனா பகவானும் நான் கொஞ்சகாலம் வைகுண்டதுல இருக்கணும்னு விதிச்சிருந்திருக்கார். ஸ்ரீரங்கத்துல, அம்மா மண்டபம் ரோட்ல, அம்மா மண்டபத்துக்கு கிட்டகையே ஒரு பிளாட்ல வீடு கிடைச்சுது. ஒரு நண்பர் சொல்லிவச்சு, நாங்க தான் வரணும்ன்னு நிறைய பிரயத்தனம் பண்ணி தான் அந்த வீடு கிடைச்சது. (நம்பிட்டோம் !)

நாங்க குடி போனது ஒரு ஆனி மாச கடைசி நாள். மறுநாளில் இருந்து ஆடி மாதமும்,அதோடே பண்டிகைகளும் தொடக்கம், ஆடி முதல் தை வரை எல்லா பண்டிகைகளையும் ஒரு தடவை கொண்டாடிட்டு திருப்பியும் இந்த சென்னை நரகத்துக்கே சாரி நகரத்துக்கே வந்தாச்சு. (நீ வந்த பின்னாடி தான் அது நரகமாகிட்டதா நிறையப்பேர் பேசிக்கறா..!)

தொடரும்...

பின் குறிப்பு : வாசகர்களுக்கு சிரமம் தரக்கூடாதென்பதர்க்காக அவர்களின் விமர்சனங்களும் அடைப்புகளுக்குள் முன்கூட்டியே தரப்பட்டிருக்கின்றன.


 

8 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிலது உண்மை தான்... () ஹிஹி...

Kavinaya சொன்னது…

//வாசகர்களுக்கு சிரமம் தரக்கூடாதென்பதர்க்காக அவர்களின் விமர்சனங்களும் அடைப்புகளுக்குள் முன்கூட்டியே தரப்பட்டிருக்கின்றன.//

அது சரி, அப்ப நாங்கள்ளாம் எப்படி பின்னூட்டறதாம் ? :)

சுசி சொன்னது…

@திண்டுக்கல் தனபாலன் : சிலது என்ன சார் எல்லாமே உண்மை தான். :))

@ கவிநயா : என்ன கவிநயா நீங்க என்ன தான் நான் எழுதினாலும் நீங்க அதுக்கும் மேலயும் சிந்திப்பீங்கன்னு எனக்கு தெரியாதா? :))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//ஐய்....! சுத்தமா மர கழண்டுடுத்து போலிருக்கே !//

இப்ப தானா?... ஹ ஹ...சும்மா சும்மா நோ டென்ஷன் ஓகே...:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//நீ போன பின்னாடி அங்க இருக்கிறவா எப்படி இருந்தா?, ஓடி இருப்பாளே!//

இதை தான் செல்ப் அனாலிசஸ்னு சொல்றதோ...;)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//அம்மா மண்டபத்துக்கு கிட்டகையே ஒரு பிளாட்ல வீடு கிடைச்சுது//

ப்ளாக் உலகின் முடிசூடா பாட்டி கூட அந்த பக்கம் தான் இருக்கறதா கேள்வி...;)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//வாசகர்களுக்கு சிரமம் தரக்கூடாதென்பதர்க்காக அவர்களின் விமர்சனங்களும் அடைப்புகளுக்குள் முன்கூட்டியே தரப்பட்டிருக்கின்றன//

அட அட அட.. எவ்ளோ நல்லவங்களா இருக்காங்க நம்ம அக்கா...:)

சுசி சொன்னது…

@ அப்பாவி தங்கமணி :// இப்ப தானா?... ஹ ஹ...சும்மா சும்மா நோ டென்ஷன் ஓகே...:)//
உங்களுக்கு இப்பத்தான் தெரிஞ்சிருக்கு. :))


//இதை தான் செல்ப் அனாலிசஸ்னு சொல்றதோ...;)// கரெக்ட் அதே தான்.

//ப்ளாக் உலகின் முடிசூடா பாட்டி கூட அந்த பக்கம் தான் இருக்கறதா கேள்வி...;)// கீதா மாமி வீட்டுக்கு எதிர் பிளட் தான்ன்னு நினைக்கிறேன். நீ, தக்குடு எல்லாம் சொன்ன அடையாளங்களை எல்லாம் வச்சு பார்த்தா அப்படித்தான் தோன்றது.
//அட அட அட.. எவ்ளோ நல்லவங்களா இருக்காங்க நம்ம அக்கா...:)// தேங்க்ஸ் :))