செவ்வாய், நவம்பர் 24, 2015

SUBSCRIBER NOT REACHABLE AT THE MOMENT FRIENDS.


என் கிட்ட இருக்கிறது ஒரே ஒரு ஓட்ட நோக்கியா. எனக்கு என்ன பெரிசா தேவை. பச்சை அமுத்தினா பேசணும், செவப்ப அமுத்தினா நிறுத்தணும் அம்புடுதேன். எனக்கு இருக்கிற ஜாக்கிரதைக்கு இதுவே ரொம்ப ஜாஸ்தி. அன்னிக்கி ஸ்கூல் சாமான் வாங்க நிறைய கடைக்கு போயிட்டு எதோ ஒரு கடையில போனை விட்டுட்டு, அப்புறம் ஒவ்வோரு கடையா தேடினேன். என் போனை எவனும் தொடக்கூட மாட்டான். இருந்தாலும் காக்கைக்கும் தன் போன் பொன் போன் இல்லீயா?

ரொம்பவே கவலைப்பட்டேன். எப்படியோ நான் விட்டுட்டு போன கடையில எடுத்து வச்சிருந்து குடுத்தான். “ரொம்ப நன்றிப்பா தம்பி”ன்னு சண்முகசுந்தரம் ரேஞ்சுக்கு உணர்ச்சிவசப்பட்டுட்டு, தொலைஞ்சு போயி திரும்ப கிடைச்ச என் தங்கத்தோட வீடு வந்து சேர்ந்தேன்
.
இன்னோரு நாள் என் தங்கத்தை கையில வச்சிண்டு கொஞ்சிண்டு இருக்கிறச்சே கை தவறி கீழ விழுந்துடுத்து. அதுல அதுக்கு நடுவுல கொஞ்சம் பக்கம் காணாம போயிடுத்து. எஸ்.எம்.எஸ் மட்டும் வரவேயில்ல. இத கண்டுபிடிக்கறத்துக்கே எனக்கு கொஞ்சநாள் ஆச்சு.

அப்புறம் கிட்ட தட்ட சீக்காளி குழந்தைய தூக்கிண்டு சுத்தற அம்மா மாதிரி அப்பவும் விடாம அதை தூக்கிண்டு சுத்திண்டு இருக்கிறச்சே, ஒரு நாள் திடீர்ன்னு திரும்பவும் என் கையிலருந்து கீழ விழுந்துடுத்து. தமிழ் சினிமால விபத்துல பழைய ஞாபகத்தை எல்லாம் இழந்துடற ஹீரோவுக்கு திருப்பியும் ஒரு விபத்துலயே பழைய ஞாபகமெல்லாம் வர்றா மாதிரி, கீழ விழுந்த போனை எடுத்து திருப்பியும் செட் பண்ணினவுடனே வந்துது பாருங்க 150 மெசேஜஸ் ஒரே நேரத்துல....

இதெல்லாமாவது பரவாயில்ல, போன வாரம் நாத்தனார் பையன் கல்யாண ரிசப்ஷனுக்கு போயிட்டு, போனை வழக்கம் போல திருவிழா கூட்டத்துல தொலைச்சிட்டு திண்டாடிண்டு இருக்கேன். இப்பத்தான் தெரிஞ்சிது, என் போன் டிக்கெட் வாங்காம வித்தவுட்லயே ஏற்காட் எக்ஸ்பிரஸ் ஏறி பொண்ணு வீட்டுகாரங்களோட தலை தீபாவளிக்கு ஈரோடுக்கு போயிடுத்துங்கற விஷயம்.

இப்போ ஈரோடு போயி திரிச்சி திருநின்றவூர் வந்துடுத்து. இந்த கூத்துல நான் கெட்ட கேட்டுக்கு என் தம்பி பொண்டாட்டி எனக்கு ஸ்மாட் போன் வாங்கி குடுத்திருக்கா. போனாவது ஸ்மார்ட்டா இருந்தாத்தான் உண்டு. அதை பத்திரமா வச்சுக்க, நமக்கு ஸ்மார்ட்னெஸ் பத்தாது.

ஆக மொத்தம், இப்போதைக்கு என்னை யாரும் காண்டாக்ட் பண்ண முடியாது. Subscriber not reachable at any moment friends.

4 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மிகவும் நகைச்சுவையான + உண்மையான அனுபவங்களை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

என்னிடமும் பழைய நோக்கியா தான் 2014 வரை இருந்து வந்தது.

இப்போது மிகவும் விலை ஜாஸ்தியான + எல்லாத் தொழில்நுட்பங்களும் ஒருங்கே அமைந்துள்ள Samsung Smart Phone என் பிள்ளையால் சமீபத்தில் நான் துபாய் சென்றபோது வாங்கிக்கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றுவரை அதனுடன் போராடியபடி ஒவ்வொன்றாகக் கற்று வருகிறேன்.

என்ன இருந்தாலும் பழைய ஃபோன் Simple & Superb என நானும் அடிக்கடி நினைத்துக்கொள்வதுண்டு.

பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுகள்.

anitha shiva சொன்னது…

இந்த ஸ்மார்ட் தங்கத்தையாவது பத்திரமா வச்கிக்கோங்கோ சகோ .

ஹா , ஹா ,ஹா ......

சிவகுமாரன் சொன்னது…

அட நம்ம கேஸு.
படித்து மகிழ்ந்தேன்.
வாழ்த்துக்கள்

சுசி சொன்னது…

@வை.கோ : உண்மைதான் சார். தங்கள் வருகைக்கு நன்றி

@ anitha shiva :ஹி...ஹி... முயற்சிக்கிறேன் சகோதரி.

@ சிவகுமரன் : ஆஹா ! என்னை மாதிரி ஏகபட்ட பேர் இருக்கீங்க போலிருக்கே !!! :) போன் தொலைக்கிறதுல எனக்கு ஏகப்பட்ட அனுபவம் இருக்கு. ஏற்கனவே தொலைச்சத பத்தி ஒரு பதிவு கூட போட்டிருக்கேன். :) :)