வியாழன், அக்டோபர் 24, 2013

வோய் திஸ் மச் நாய்ஸ் கேர்ள்ஸ்...!?

இன்னிக்கு இதுங்களை ஸ்கூல்க்கு கொண்டுவிடும் பணி என்னிடம் வந்துவிட்டது. மாடியில் இருந்து இறங்கும்போதே கிழே காத்திருந்தது அது. "ஹாய் வோயட்டி !" என்றபடியே இறங்கினார்கள். அதுவும் இவர்கள் வரவை ஆவலுடன் எதிர் நோக்கி வால் வாசல் கதவில் "டப், டப் " என்று அடித்து சத்தம் கேட்கும் படி வேகமாக ஆட்டியது.

"அக்காவோடல்லாம் ஸ்கூல்லுக்கு வரியாடா ?"

"ரொம்ப முக்கியம் நாய்க்கு படிப்பு." (மனதிற்குள் நொந்து கொண்டேன்.)

ொஞ்ச ஆரம்பித்தார்கள். அதுவும் தன் பெரிய உடம்பை ஆட்டி விளையாடியது. வெள்ளையாய்,பெரிசாய் இருப்பதால் "ஐராவதம்" என்று பேர் வைத்திருக்கலாம் என்று தோன்றியது.

"சரி,சரி, வாங்கோ, டைம் ஆச்சு !"

வீட்டு கேட்டை தாண்டினோம். வெள்ளையும்,பழுப்புமாய் ஒன்று தெருவில் வந்து கொண்டிருந்தது.

"அம்மா ! இது எங்க பிரெண்டும்மா !"

"அது சரி, வோயட்டி தம்பி, இது பிரெண்ட்டா?" (மனசுக்குள்ளயே)

அடுத்து அவர்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

"போடி என்ன இருந்தாலும் "குட்டு (goodu)" தான் ரொம்ப சமத்து என்மேல ரெண்டு காலையும் போட்டுண்டு எப்படி ஏறி நிப்பான் தெரியுமா?"

"இல்ல "மிஸ்க்கு (mishkku)" தான் சமத்து நம்ம பர்மிஷன் இல்லாம நக்கவே நக்காது."

"goodu, புசு,புசு ன்னு சிங்க குட்டி மாதிரி இருக்கான் பார்த்தியா."

"ஏன் mishkku வும் தான்."

ரெண்டும் தெரு முனையில் இருக்கும் வீட்டில் இருக்கும் ரெண்டு கோல்டன் ரெட்ரிவர் வகை நாய்கள்.

"ரெக்ஸ் அன்னிக்கு என்ன பார்த்து எப்படி வாலாட்டினான் தெரியுமாம்மா!?"

"எனக்கிட்ட வாலாட்டி இருந்தா அப்போ தெரிஞ்சிருக்கும் அதுக்கு." (கறுவிக்கொண்டேன், இதுவும் மனசுக்குள்ளயே தான்)

தெருமுனை தாண்டினோம். ஒரு வீட்டில் இருந்து "குக்வக்,குக்வக்" என்று ஒரு பொமரேனியன் செல்லமாக கத்தியது.

"அம்மா, அதுதாம்மா "லக்கி" ரொம்ப சமத்து எங்க பிரெண்ட்."

அடுத்ததாக எதாவது ஒரு பக்கியை அறிமுகபடுத்துவார்களோ என்று பயமாக இருந்தது.

ஒருவழியாய் ஸ்கூலில் விட்டு விட்டு வந்து தலைவரிடம் கேட்டேன் "ஏம்ப்பா, நம்ம பொண்ணுங்களுக்கு யாரும் மனுஷ பிரெண்ட்ஸ்யே இல்லியோ...!?"

7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா....

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஹா... ஹா.... அருமை...

சுசி சொன்னது…

@ சே.குமார் & திண்டுக்கல் தனபாலன் : அட! எப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி கமெண்ட் போட்டிருக்கீங்க! :))

நன்றிங்க!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

ha ha ha...sema kaduppula irukkenga pola irukke akka...:)

சுசி சொன்னது…

@ அப்பாவி தங்கமணி : ஆமாம், பின்ன இவங்க பேச்சுல ஒரு மனுஷங்க கூட இருக்கிறதில்ல. இதுல இன்னமும் ப்ளக்கி, ப்ரௌனி, பிஸ்கட் நாய் இதை எல்லாம் மென்ஷன் பண்ண விட்டுட்டேன்.

Gopikaa சொன்னது…

Cool Down...Cool Down...Cool Dowwwwnnn (vadivelu dialogue style - il vaasikavum!)

சுசி சொன்னது…

@Gopikaa : Thanks for your comments pa !