திங்கள், ஆகஸ்ட் 08, 2011

புவனேஸ்வரி மகாத்மியம் - பகுதி 3

 ம்ம்... கதையை எங்கே விட்டேன்? ஆங்... அந்த பள்ளி கூட வாசலில் நின்றிருந்த parents இடம் மொபைல் போன் தந்து உதவும் படி கேட்டேனல்லவா? ஒரு பெண்மணி அவரது போனை தந்தார். என் மொபைலுக்கு போன் அடித்தேன். போன் அடித்த போதுதான் ஆடோகாரருக்கு என் பை அவர் வண்டியில் இருப்பதே தெரிந்திருக்கிறது. அவர் போன் எடுத்து ஹலோ என்றார். பின் எனக்கும் அவருக்கும் இடையே நடந்த உரையாடல் கீழே.

ஹலோ ! ஆட்டோ மென்ங்களா? 

ஆமாங்க !

சார் ! நான்தான் சார் உங்க வண்டியில்ல இப்போ ஸ்கூல் வாசல்ல இறங்கினேனே! என் பையை உங்க வண்டியில தவற விட்டுடேங்க, கொஞ்சம் திருப்பி கொண்டு வந்து தரமுடியுமா? 

அதெல்லாம் இப்ப முடியாதுங்க. ஏழு மணிக்கு மேல வந்து வாங்கிகோங்க.

என்னது ! ஏழு மணிக்கு மேலயா ??? சார் நான் ஐந்து மணிக்கு ஊருக்கு போகணும் சார். இப்பவே என் பையை குடுதிடுங்க சார்.

அதெல்லாம் முடியாதுமா, ஏழு மணிக்கு மேல வந்து வாங்கிகோங்க. 

(இடையில் சுவிட்ச் ஆப் பண்ணு ! சுவிட்ச் ஆப் பண்ணு ! என்று குரல்கள் வேறு கேட்கிறது.)

சார், ப்ளீஸ் தயவு செய்து என் பேகை குடுத்திடுங்க. 

இத பாருங்கம்மா ! திரும்பி வந்து நான் பையை குடுக்கனும்னா அதுக்கும் முப்பது ரூபாய் குடுக்கணும்.

சரி ! தரேன் தயவு செய்து பையை குடுங்க சார்.

சரி ! ஒரு அஞ்சு மணிக்கு வந்து வாங்கிகோங்க.

நான் அஞ்சு மணிக்கு ஊருக்கு போகணும் சார். அதோட எங்க வந்து நான் வாங்கிக்கறது?

(மீண்டும் சுவிட்ச் ஆப் பண்ணு, சுவிட்ச் ஆப் பண்ணு குரல்கள் கேட்கின்றன.)

ஏன் போன் ஐ சுவிட்ச் ஆப் பண்ணி போட எனக்கு தெரியாது !?  நான் இப்போ கோமதி நகர்ல இருக்கேன். இப்போ எல்லாம் தரமுடியாது.

சார் ! அப்படியெல்லாம் சொல்லாதீங்க...(போன் கட் பண்ண படுகிறது).

சுற்றி இருந்தவர்களின் பரிதாப பார்வை என்னையே மையபடுத்தி நிற்கிறது. இப்போது என்ன செய்வது? அந்த அம்மாளிடமே அனுமதி பெற்று அவர் போனில் இருந்தே என் கணவருக்கு போன் அடித்தேன். வேறு ஒரு எண்ணில் இருந்து நான் கூப்பிடவும் குழம்பி போன அவர் பின்னர் விவரம் அறிந்து எரிச்சல் பட்டார்.

"நான் போன் பண்ணினா கட் பண்ணிடுவருங்க, நீங்க உங்க போன் ல்ல இருந்து எப்படியாவது நைசா பேசி வாங்கிடுங்க."

அவரும் போன் பண்ணி பார்த்திருக்கிறார். அடிக்கடி போன் அடிக்கவும் ஆடோக்காரர் போன் ஐ சுவிட்ச் ஆப் செய்து விட்டார். நல்ல வேளை யாக தலைவர் நான் இருந்த இடத்திற்கு அருகில் வந்து விட்டிருந்தார். அந்த பெண்மணிக்கு நன்றி கூறிவிட்டு புறபட்டோம். வழி நெடுகிலும் ஒரே லக்ஷார்ச்சனை, சஹாசர்ணாம அர்ச்சனை தான் எனக்கு.

"இப்படியா ஒருத்தி போன், எ.டி.எம் கார்டு, பணம் எல்லாத்தையும் பைல வச்சு இந்தா ஜாக்பாட் இங்கிரமதிரி விடுவா?"

"அந்த ஆட்டோ காரர் பையை திருப்பி தர ஐடியா யாலே இல்ல போலிருக்கே? நான் போன் பண்ணினதும் சுவிட்ச் ஆப் பண்ணிட்டான்." என்று திட்டிகொண்டே வந்தார்.

வீட்டுக்கு வந்து, "போன் காணோம் என்று போலீஸ் கம்ப்ளைன்ட் குடுங்க". என்றேன் . 

"ஆமா ! ஒரு நாளைக்கு ஊர்ல்ல ஆயிரம் போன் காணாம போகுது. உன் போன் ஐ கண்டு பிடிக்கிறது தான் போலீஸ் வேலையா? பேசாம ஊர்ருக்கு கிளம்பற வழியை பாரு." என்று சொன்னாலும் மொபைல் மிஸ்ஸிங் செல்லுக்கு போன் செய்தார். அந்த எண் பழுது பட்டிருந்தது. 

தலைவரிடம் மீண்டும் போன் செய்து பார்க்க சொன்னேன். அவரோ கோபத்தோடு ," அதுக்கெல்லாம் இப்போ நேரமில்லை கிளம்பற வழியை பாரு. நீ பையை விட்டா கொண்டு வந்து குடுகிறது தான் அவன் வேலையா? " என்றார் 

எனக்கு ஆவேசமே வந்து விட்டது. தவறு நடப்பது சகஜம் தானே அதை தனக்கு சாதகமாக்கி கொள்ளுவது எப்படி சரியாகும்? "சரி, நான் கடவுளிடம் சொல்லி கொள்கிறேன்." என்று முடிவு செய்தேன். நேராக சமையலறை குள் சென்றேன். ஒரு தட்டில் ஒரு வெல்ல கட்டியை எடுத்து வைத்தேன். பூஜை அறையில் வைத்தேன் புவனேஸ்வரி படத்தை பார்த்தேன். "வேறு யாருக்காவது இந்த நிலை ஏற்படிருந்தால் நான் உதவி இருப்பேன் என்று நீ நினைத்தால், நான் உன் பேரை சதா உச்சரித்து கொண்டே இருப்பது பொய் இல்லை என்றால் என் பை நிச்சயம் கிடைக்கும்." என்று அவளிடம் மனதிற்குள் சொன்னேன்.

"என்கிட்ட அவர் ஸ்கூல் ஆட்டோ ன்னு சொன்னாருங்க, ஒரு வேளை ஸ்கூல் வாசலில் அவரை கண்டு பிடிச்சாலும் பிடிச்சிடலாம்."

"சரி, எப்படியும் பெரியவளுக்கு ஸ்கூல் விடும் நேரமாகி விட்டது. வா ! பார்க்கலாம்."

ஸ்கூல் வாசலில் ஒவ்வொரு ஆட்டோ வாக தேடினோம். நேரமாகி கொண்டிருந்தது .ஒவ்வொரு ஆட்டோ மேனிடமும் யாராவது சக ஆட்டோ மேன் வண்டியில் பை   கிடைத்ததாக கூறினார்களா? என்று விசாரித்தோம்.

யாருக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை. தலைவரின் கோபமும் தன் அணைகளை உடைத்து கொண்டு பாய தயாராக இருந்தது. இதற்குள் பெரியவளும் அவள் தோழர்களும் (கண்ணன், குரு)வந்தார்கள். நான் எல்லோரிடமும் விசாரிப்பதை பார்த்து குரு ரொம்ப அக்கரையாக, " என்ன ஆன்டி பேக் தொலைச்சிடீங்களா? எங்கே? எப்படி?" என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டான். அவர்களை கண்ணனின் அம்மா ரமணி யிடம் ஒப்படைத்து விட்டு பெரியவளை அழைத்து கொண்டு கவலையோடு வீடு திரும்பினோம்.

குழந்தைகளுக்கு  பால் காய்ச்சி கொண்டிருந்தேன். பெரியவள் என்னிடம் வந்து "ஏம்மா sad ஆ இருக்க?"

"என் பையை ஆட்டோல்ல தொலைச்சிட்டேன். அந்த ஆட்டோ காரர் பையை திருப்பி தராம மழுபல்லா பதில் சொல்றாருடா."

"நாங்கல்லாம் ஸ்கூல்ல  எதாவது பென்சில் கீழே கிடந்தா எடுத்து, இது யாரது ? இது யாரது ன்னு கேட்டு குடுப்போமே? ஆனா இவ்வளவு பெரியவரான அந்த ஆட்டோ மேன் உன் பேகை அப்படி திருப்பி தரவேணாமா?" என்றாள்.

"உனக்கு தெரிந்த இந்த விஷயம் பெரியவர்களுக்கு தெரியவில்லையே?" என்று நினைத்து கொண்டிருக்கும் போதே தலைவர் யாருடனோ போனில் பேசுவது கேட்டது.

"சார், நான் தான் சார் உங்க ஆட்டோ ல்ல பேக் விட்டாங்களே, அவங்க வீட்டுக்காரர் பேசறேன். பை எங்க வந்து வாங்கிகட்டும்?" 

"---------------------------"

"சரி, வண்டி நம்பர் சொல்லுங்க, எங்க சங்கரா ஸ்கூல் வாசல்லையா?, சரி இப்பவே வரேன்."

என்னால் நம்பவே முடியவில்லை. தலைவர் எதற்கும் போன் செய்து பார்ப்போமே என்று என் போன் இற்கு போன் செய்து பார்த்திருக்கிறார். போன் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டு இருந்தது மட்டுமல்ல ஆட்டோ மேன் போன் ஐ எடுத்து அவர் ஸ்கூல் சவாரிக்கு வரும் சங்கரா ஸ்கூல் வாசலில் வந்து பையை வாங்கி கொள்ளும் படி கூறியுள்ளார்.  தலைவர் பையை வாங்க கிளம்பி சென்ற உடன் கண்ணனின் அம்மா ரமணி போன் செய்தார்(லேன்ட் லைனில்). 

"என்னங்க, பையை ஆட்டோ ல்ல விட்டுடீங்கன்னு கண்ணன் சொன்னான். நான் உங்க மொபைல் போனுக்கு போன் பண்ணி பார்த்தேன். அந்த ஆட்டோ காரர் தான் எடுத்தார். அவர் கிட்ட, "சார்! என் தோழியோடது தான் சார் அந்த பை தயவு செஞ்சு கொஞ்சம் கொண்டு வந்து குடுங்க."  என்று சொன்னேன். 

அதற்க்கு அவர்,"அவங்களே வந்து வாங்கி பாங்க." என்று எரிச்சலாக சொல்லிவிட்டார் என்றார்.

உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்த நான் நடந்த அனைத்தையும் விவரித்தேன்.

"சரி, எப்படியும் கிடைச்சிடும், கவலை படாதீர்கள்." என்று ஆறுதல் கூறி விட்டு வைத்து விட்டார்.

அடுத்த அரைமணி நேரத்தில் என் பை எந்த நிலையில் காணாமல் போனதோ அதே நிலையில் ஒரு பொருளும் தொலையாமல் அப்படியே கிடைத்து விட்டது.

தலைவர் சென்றவுடன் அந்த ஆட்டோ காரரே பையை கொடுத்து "நான் சாப்பிட போய்கிடிருந்தேன் சார். ரொம்ப பசி அதனால தான் பையை கொண்டு வந்து குடுக்க முடியலை. எல்லாம் சரியாய் இருக்கா பார்த்துகோங்க." என்றாராம்.

தலைவர் அவருக்கு நன்றி சொல்லி சிறு அன்பளிப்பும் வழங்கி விட்டு பையை வாங்கி கொண்டு வந்திருக்கிறார்.

பெரியவள்,"அப்பா, பையை குடுகாததுக்கு ஆட்டோ மேன் உன் கிட்ட சாரி சொன்னாராப்பா?" என்றாள்.

நான் அவளிடம்,"அவர் சாரி சொல்ல வேண்டாம்மா. பையை விட்டது நான் தானே. அதை அவர் நல்ல படியாய் திருப்பி தந்திருகின்றார். அவருக்கு நாம் தான் நன்றி சொல்ல வேண்டும்." என்றேன்.

மறக்காமல் போன் தந்து உதவிய அந்த பெயர் தெரியாத பெண்மணிக்கும், ரமணிக்கும் போன் செய்து நன்றி சொல்லிவிட்டு ஊருக்கு புறப்பட்டோம்.

சரி, கதை முடிந்தது. இப்போது கேள்விகளுக்கு வருவோம்.

* சமயத்தில் போன் தந்து உதவிய அந்த பெயர் தெரியாத பெண்மணி யார்?

* முதலில் எதிர்மறையாய் பேசிய ஆட்டோ காரர் மனம் மாறியது எப்படி?

* "போன் செய்து முயற்சிக்கவே மாட்டேன். பை கிடைக்காது." என்று சொல்லி கொண்டிருந்த தலைவர் மனம் மாறி போன் செய்தது ஏன்?

* கண்ணனின் அம்மா ஆட்டோ காரருக்கு போன் செய்தது ஏன்?

*ஆட்டோ காரருக்கு என்னை ஏமாற்றும் எண்ணம் இருக்கவில்லை என்று      தலைவர் கூறினார். 









"தனம் தரும், கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா 
மனம் தரும்,தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும்நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே 
கனம் தரும், பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. "

ஆம்,அன்னையின் அருள் நமக்கு நல்லவர்களை நட்பாக்கி வைக்கும். நம்மை சுற்றி நல்லவர்களை வைத்து நமக்கு துன்பம் நேரும் போது அவர்கள் நமக்கு உதவுமாறு செய்வது அவள் அன்பு.

போன் தந்து உதவிய பெண், ஆட்டோகாரர், ரமணி, குழந்தை குரு எல்லோரும் நல்லவர்களே. இதை உணர்த்த தான் இந்த திருவிளையாடல்.

என் நம்பிக்கையை நானே உணர வைத்ததும் இந்த நிகழ்ச்சியே.

                                        

                                       நல்லதையே நினைப்போம்! 

                                       நல்லதையே சொல்வோம்! 

                                        நல்லதையே செய்வோம்!.

                                               நல்லதே நடக்கும்.



                                                              சுபம்



9 கருத்துகள்:

RAMA RAVI (RAMVI) சொன்னது…

// நல்லதையே நினைப்போம்!

நல்லதையே சொல்வோம்!

நல்லதையே செய்வோம்!.

நல்லதே நடக்கும்.//

சிலிர்க்க வைக்கும் அனுபவம்.
புவனேஸ்வரியின் அருள் உங்களுக்கு இருக்கு. தா. தலைவி.
ஊருக்கு போய் வந்த அனுபவத்தையும் எங்களுக்கு சொல்லுங்க.

சுசி சொன்னது…

நன்றி ரமா,

ஊருக்கு போயிட்டு வந்த அனுபவமா? அதை நினைச்சாலே நொந்து போய்டுவேன். It was a very tedious and tiresome trip. Still, we enjoyed the challenges also.
தங்கமணி, லக்ஷ்மி அம்மா எல்லோரும் என் ப்ளாக்கிற்கு வர முடியவில்லை என்று சொல்கிறார்களே, நீங்கள் மட்டும் எப்படி வருகிறீர்கள்? எதாவது ரகசிய வழி வைத்திருக்கிறீர்களா ?

RAMA RAVI (RAMVI) சொன்னது…

தா. தலைவி. உங்க பிளக்கின் டாஷ்போர்ட் ல் ”அமைப்புகளுக்கு” போய் அங்கு ”அனுமதிகள்” தேர்வு செய்யவும். அதில் ”இந்த வலைப்பதிவை யாரெல்லாம் காணலாம்” என்று இருப்பதில் “யார் வேண்டுமானால்” என்பதை தேர்வு செய்து சேமிக்கவும். அதன் பிறகே உங்க வலைபதிவை எல்லோரும் பார்க்க முடியும் என நினைக்கிறேன். முயற்சி செய்து பார்க்கவும்.
கூகில் சர்ச்ல போய் thaanai thalaivi .blogspot என்று தேடினால் உங்க blog எனக்கு கிடைக்கும்.நான் அப்படி போய்தான் உங்க ப்லொக்ஐ பார்க்கிறேன்.

என்னுடைய பிளாக்கில் follow by e-mail என்பதில் உங்க e-mail id கொடுத்து பதிவு செய்து கொண்டால் நான் பதிவிடும் பொழுதெல்லாம் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிடும். பதிவு செய்ய அதிக நேரம் ஆகாது.
நன்றி.

சுசி சொன்னது…

நன்றி ரமாஜி,

அமைப்புகளில் யார் வேண்டுமானாலும் என்று தான் இருக்கிறது ஆனால் "word verification" நான் சரியாக கொடுக்காததால் save ஆக வில்லை என்று நினைக்கிறன். இப்போது மாற்றிவிட்டேன். தங்கள் வழி காட்டலுக்கு மீண்டும் என் நன்றிகள்.

என் blog இல் followers option அமைக்க முடியவில்லை.

Kavinaya சொன்னது…

நீங்க சொன்ன அம்மாதான் எனக்கும் favorite! நீங்க என் வலைக்கு வந்ததிலிருந்தே தெரிஞ்சு போச்சே! :) அருமையான அனுபவத்தை அருமையாகப் பகிர்ந்து கொண்டும் இருக்கிறீர்கள். வாழ்க!

சுசி சொன்னது…

நன்றி கவிநயா !, அந்த அம்மா மட்டுமல்ல, புதுகோட்டை, வைதீஸ்வரன் கோவில் எல்லாமே உங்களுக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமைகள். நேற்று தான் உங்கள் வைதீஸ்வரன் கோவில் பாதயாத்திரை அனுபவங்களை படித்தேன்.அருமை.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஆம்,அன்னையின் அருள் நமக்கு நல்லவர்களை நட்பாக்கி வைக்கும். நம்மை சுற்றி நல்லவர்களை வைத்து நமக்கு துன்பம் நேரும் போது அவர்கள் நமக்கு உதவுமாறு செய்வது அவள் அன்பு./

அன்பான அன்னையின் அருளால் நலம்
அடைவோம் அனைவரும் என்ற நம்பிகைப் பகிர்வுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

அட இதுதான் கதை சொல்லி கருத்து சொல்றதுன்னு சொல்லுவாங்களா

மிக அருமை
வாழ்த்த வயதில்லை
வணக்கங்கள் ..(/\)

தானே தலைவி வாழ்க
தானே தலைவி வாழ்க
தானே தலைவி வாழ்க
தானே தலைவி வாழ்க
தானே தலைவி வாழ்க

சுசி சொன்னது…

நன்றி சிவா, வாழ்க ! வளர்க !